நடிகர் அதர்வாக்கு கொரோனா தொற்று… வீட்டில் தனிமையில் ஓய்வு !
சென்னை : அதர்வாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் மட்டும் 9,344 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 9344
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 9,344 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,80,726 பேராக அதிகரித்துள்ளது.

கொரோனா
கொரோனாவுக்கு பலத்திரைப்பிரபலங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மாதவன், நகைச்சுவை நடிகர் செந்தில் அவரது குடும்பத்தினர், சுந்தர் சி, சோனு சூட் ,ரன்பீர் சிங், அமீர் கான், ஆலியா பட், பவன் கல்யாண், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

தொற்று உறுதி
இந்நிலையில் நடிகர் அதர்வா கொரோவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கொரோனா அறிகுறி தெரிந்ததால் பரிசோதனை செய்ததாகவும் இதையடுத்து கொரேனா தொற்று உறுதியாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்

ஆலோசனை
தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ள போதிலும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்தே காணப்படுகிறது. இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில், சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











