twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    துணிந்த பின்’ ஒரு அற்புதமான அனுபவம்… ‘நவரசா‘ படம் குறித்து அதர்வாவின் ருசிகரத்தகவல் !

    |

    சென்னை : ஓடிடி தளங்கள் பிரபலமடைந்துள்ளதால், ஓடிடி தளத்தில் வெளியாவதற்கென்றே படங்களும், வெப் சீரிஸ்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது நெட்ஃப்ளிக்ஸில் ஆகஸ்ட் 9ந் தேதி வெளியாக உள்ளது நவரசா.

    தைரியத்தை மையமாகக் கொண்டு துணிந்தபின் என்ற குறும்படத்தில் அதர்வா முரளி நடித்துள்ளார்.

    கொஞ்சம் காத்தடிச்சாலும் அவ்ளோ தான்.. விஜய் பட ஹீரோயின் பண்ற வேலையை பார்த்தீங்களா!கொஞ்சம் காத்தடிச்சாலும் அவ்ளோ தான்.. விஜய் பட ஹீரோயின் பண்ற வேலையை பார்த்தீங்களா!

    இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து ருசிகரமான பல தகவல்களை கூறியுள்ளார் அதர்வா.

    9 குறும்படங்கள்

    9 குறும்படங்கள்

    கெளதம் மேனன், அரவிந்த்சாமி, பிரியதர்ஷன், கார்த்திக்நரேன், வசந்த் சாய்,கார்த்திக்சுப்புராஜ், பிஜோய் நம்பியார், சர்ஜூன், ரதீந்திரன்பிரசாத் என 9 இயக்குனர்கள், கிடார் கம்பி மேலே நின்று,சம்மன் ஆஃப் 92,பீஸ், இன்மை, துணிந்த பின், ப்ராஜெக்ட் அக்னி, ரௌத்திரம், எதிரி, பாயாசம் என 9 குறும்படங்களை உருவாக்கி உள்ளனர்.

    9 குணாதிசயங்கள்

    9 குணாதிசயங்கள்

    கோபம், சிரிப்பு, காதல், வியப்பு, வெறுப்பு, ஆச்சர்யம் போன்ற 9 உணர்வுகளை அடிப்படையாக கொண்டு படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சூர்யா, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், அரவிந்த்சாமி, சித்தார்த், அதர்வா, பாபி சிம்ஹா, ரேவதி, ரோகினி, அதிதி பாலன், ரித்விகா, யோகி பாபு, உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

    எதிரி

    எதிரி

    விஜய்சேதுபதி நடித்துள்ள குறும்படத்திற்கு எதிரி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில், விஜய்சேதுபதி, ரேவதி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர். இக்குறும்படத்தை பெஜோய் நம்பியார் இயக்கி உள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்திற்கு மதன்கார்க்கி பாடலை எழுதியுள்ளார்.

    சம்மப் ஆஃப்

    சம்மப் ஆஃப்

    9 குணாதிசயங்களில் நகைச்சுவை பகுதியாக சம்மர் ஆஃப் 92 குறும்படம் உருவாகி உள்ளது. இதை ப்ரியதர்ஷன் இயக்கி உள்ளார். இதில் யோகி பாபு, ரம்யா நம்பீசன் நெடுமுடி வேணு ஆகியோர் நடித்துள்ளனர்.

    ப்ராஜக்ட் அக்னி

    ப்ராஜக்ட் அக்னி

    ப்ராஜக்ட் அக்னி என்ற குறும்படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி உள்ளார். அரவிந்த் சுவாமி, பிரசன்னா, பூர்ணா இதில் நடித்துள்ளனர்.

    பாயாசம்

    பாயாசம்

    அருவி திரைப்படத்திற்கு பிறகு தமிழில் அதிதி பாலன் இதில் நடித்துள்ளார். இப்படத்திற்கு பாயாசம் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் டெல்லி கணேஷ், ரோகிணி, அதிதி பாலன். செல்ஃபி கார்த்திக் ஆகியோர் நடித்துள்ளனர்.

    அமைதி

    அமைதி

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ள குறும்படம் அமைதி, இதில் பாபி சிம்ஹா, கௌதம் வாசுதேவ் மேனன், மாஸ்டர் தருண் ஆகியோர் நடித்துள்ளனர். இது நவரசத்தில் அமைதியை குறிக்கிறது.

    ரௌத்திரம்

    ரௌத்திரம்

    கோபத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் அர்விந்த் சுவாமி இயக்கி உள்ள திரைப்படம் ரௌத்திரம். இத்திரைப்படத்தில் ரித்விகா ஸ்ரீராம், அபிநய ஸ்ரீ, ரமேஷ் திலக் , கீதா கைலாசம் ஆகியோர் நடித்துள்ளனர்.

    இன்மை

    இன்மை

    நவரசா குறும்படத்தில் இன்மை என்ற குறும்படத்தில் சித்தார் நடித்திருந்தார். இக்குறும்படத்தை ரவீந்திரன் பிரசாத் இயக்கி உள்ளார். பயத்தை உணர்த்தும் இன்மை என்ற குறும்படம் மக்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் குறும்படமாக இருக்கும் என்று சித்தார் சமீபத்தில் கூறியிருந்தார்.

    கிடார் கம்பியின் மேலே நின்று

    கிடார் கம்பியின் மேலே நின்று

    காதல் கதைகளை கவிதையுடன் கூறுவதில் வல்லவரான கௌதம் வாசுதேவ் மேனன், நவரசா பகுதியில் கிடார் கம்பியின் மேலே நின்று என்ற காதல் கதையை உருவாக்கி உள்ளார். இதில், சூர்யா ப்ரயா ரோஸ் மார்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    துணிந்த பின்

    துணிந்த பின்

    தைரியத்தை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் துணிந்த பின், இப்படத்தில் அதர்வா, அஞ்சலி கிஷார் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை சர்ஜூன் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் அதர்வா கூறியுள்ளார்.

    அற்புதமான அனுபவம்

    அற்புதமான அனுபவம்

    இயக்குனர் , இப்படம் குறித்து விவரித்த போது என் மனம் சந்தோஷத்தின் உச்சிக்கு சென்றது. நான் ஸ்பெஷல் டாஸ்க் போர்சில் உள்ள ஒரு சிறப்பு அதிகாரியாக நடித்துள்ளேன். இந்த படம் எனக்கு வித்தியாசமான அனுபவத்தை தந்தது. இயக்குனர் சர்ஜூனுடன் பணிபுரிந்தது மற்றும் வெற்றி என்ற கதாபாத்திரத்தில் நடித்தது மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்தது.

    English summary
    director Sarjun KM’s segment Thunintha Pin from the nine-part anthology. Thunintha Pin which is based on the emotion of courage, features actors Atharvaa, Anjali and Kishore in the lead.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X