அதர்வாவின் இளைய சகோதரரை இயக்கும் விஷ்ணுவர்தன்.. யாரு ஜோடி தெரியுமா?

சென்னை : இயக்குநர் விஷ்ணுவர்தன் அஜித் உள்ளிட்டவர்களை வைத்து சிறப்பான வெற்றிப் படங்களை கொடுத்தவர்.

அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் என இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்த விஷ்ணு வர்தன் பாலிவுட்டில் படம் இயக்கியுள்ளார்.

தற்போது அதர்வாவின் இளைய சகோதரரை வைத்து தமிழில் தன்னுடைய அடுத்தப்படத்தை துவக்கியுள்ளார் விஷ்ணுவர்தன்.

 இயக்குநர் விஷ்ணுவர்தன்

இயக்குநர் விஷ்ணுவர்தன்

இயக்குநர் விஷ்ணுவர்தன் அறிந்தும் அறியாமலும், பட்டியல் ஆரம்பம் என அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்தவர். இவரது இயக்கத்தில் கடந்த 2007ம் ஆண்டில் அஜித் லீட் கேரக்டரில் நடிக்க பில்லா படம் ரிலீசானது. ரஜினியின் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த பில்லா படத்தின் ரீமேக்காகவே இந்தப் படம் ரிலீசானது என்றாலும் அதிகமான ஆக்ஷன் காட்சிகளுடன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அஜித்தின் சூப்பர்ஹிட் படங்கள்

அஜித்தின் சூப்பர்ஹிட் படங்கள்

பில்லா படத்தின் இரண்டாவது பாகமும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பில்லா 3 படத்தையும் விஷ்ணுவர்தன் எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்த நிலையில், இந்தப் படத்தை எடுக்கும் எண்ணம் தற்போது இல்லை என்று அவர் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். சில படங்களை மீண்டும் எடுக்காமல் இருப்பதே அதன் தனித்தன்மையை தக்க வைக்கும் என்றும் பில்லா படமும் அந்த கேட்டகரியிலேயே இருக்கட்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்தியில் படமியக்கிய விஷ்ணுவர்தன்

இந்தியில் படமியக்கிய விஷ்ணுவர்தன்

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்த மொழிகளில் படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன், கார்கிலில் வீரமரணம் அடைந்த கேப்டன் விக்ரம் பட்ராவின் வாழ்க்கை வரலாற்றை ஷெர்ஷா என்ற பெயரில் இந்தியில் இயக்கினார். இந்தப் படம் ஓடிடியில் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஒரு ராணுவ வீரரின் மரணம் அவரது குடும்பம், நண்பர்களை எப்படி பாதிக்கிறது என்பதை கதைக்களமாக இந்தப் படம் கொண்டிருந்தது.

தமிழில் மீண்டும் இயக்கம்

தமிழில் மீண்டும் இயக்கம்

இந்நிலையில் நீண்ட காலங்களுக்கு பிறகு தற்போது மறைந்த நடிகர் முரளியின் இளையமகனும் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளியை வைத்து படமியக்கி வருகிறார் விஷ்ணுவர்தன். படத்தில் ஆகாஷிற்கு ஜோடியாகியுள்ளார் பிரபவ இயக்குநர் ஷங்கரின் மகள் அதீதி ஷங்கர். இந்தப் படத்தை விஜய்யின் மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ, தன்னுடைய XB பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிக்கவுள்ளது. படத்தின் சூட்டிங் தற்போது சென்னை ஈசிஆரில் படமாக்கப்பட்டு வருகிறது.

அஜித்தின் கேரியர் பெஸ்ட் படங்கள்

அஜித்தின் கேரியர் பெஸ்ட் படங்கள்

இயக்குநர் விஷ்ணுவர்தன் இந்திய அளவில் மிகச்சிறப்பான இயக்குநராக அறியப்படுபவர். தன்னுடைய படங்களின் ஹீரோக்களை மிகவும் ஸ்டைலிஷ்ஷாக காட்டுபவர். அந்த வகையில், பில்லா, ஆரம்பம் படங்கள் அஜித்தின் கேரியர் பெஸ்ட் படங்களாக காணப்படுகின்றன. இந்தப் படங்களில் அஜித் மிகவும் ஸ்டைலிஷ் லுக்கில் காணப்படுவார். அடுத்தடுத்த சிறப்பான படங்களை கொடுத்த விஷ்ணு வர்தன், தெலுங்கு, இந்தி என படங்களில் கவனம் செலுத்திய நிலையில், தற்போது மீண்டும் தமிழில் படமியக்கிவருவது ரசிகர்களுக்கு இனிப்பான செய்திதான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X