நவரசா ஆந்தாலஜி… கையில் துப்பாக்கியுடன்... ராணுவ வீரர் உடையில் கெத்தாக இருக்கும் அதர்வா !
சென்னை : நவரசா ஆந்தாலஜி படத்தில் அதர்வா நடித்துள்ள துணிந்தபின் படத்தில், ராணுவ வீரர் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த படத்தை சர்ஜூன் இயக்கி உள்ளார். இதில் அதர்வா மற்றும் அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்திலிருந்து ஒசர பறந்து வா பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வைரலாகி பெரும் வரவேற்பை பெற்றது.

நெட்ஃப்ளிக்ஸில்
ஓடிடி தளங்கள் பிரபலமடைந்துள்ளதால், ஓடிடி தளத்தில் வெளியாவதற்கென்றே படங்களும், வெப் சீரிஸ்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக உள்ள 'நவரசா' ஆந்தாலஜி தயாராகியுள்ளது. ஒன்பது பேர், ஒன்பது தனித்தனி கதைகளை இதற்காக இயக்குகின்றனர்.

9 தனித்தனி கதைகள்
நவரசா ஆந்தாலஜி. கெளதம் மேனன், அரவிந்த்சாமி, பிரியதர்ஷன், கார்த்திக்நரேன், வசந்த் சாய்,கார்த்திக்சுப்புராஜ், பிஜோய் நம்பியார், சர்ஜூன், ரதீந்திரன்பிரசாத் என 9 இயக்குநர்கள்9 கதைகளை இயக்கியுள்ளனர். இந்த ஆந்தாலஜி திரைப்படம் வரும் 6ந் தேதி நெட்பிளிக்சில் வெளியாக உள்ளது.

முன்னணி நடிகர்கள்
கோபம், சிரிப்பு,பயம், காதல், வியப்பு, இரக்கம், வெறுப்பு, ஆச்சர்யம் போன்ற 9 உணர்வுகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படங்களில் சூர்யா, விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், அரவிந்த்சாமி, சித்தார்த், அதர்வா, பாபி சிம்ஹா, ரேவதி, ரோகினி, அஞ்சலி, அதிதி பாலன், ரித்விகா, யோபி பாபு, உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ராணுவ உடையில்
சர்ஜுன் இயக்கத்தில் அதர்வா முரளி அஞ்சலி நடித்துள்ள படத்திற்கு துணிந்தபின் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அதர்வா ஒரு ராணுவ வீரராக நடித்துள்ளார். இந்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ராணுவ உடையில் கையில் துப்பாக்கியுடன் மிகவும் மிரட்டலாக இருக்கிறார் அதர்வா இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











