நெஞ்சில் குத்தியது யார்? சித்ரா மரணத்தில் அவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம்.. பிரபல நடிகர் பகீர்!
சென்னை: சித்ராவின் மரணத்தில் ஹேமந்தின் நண்பர்களும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என பிரபல நடிகர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா மரணமடைந்து ஒருவாரம் ஆகி விட்டது. ஆனால் அவரது மரணத்தில் நாள்தோறும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகிறது.
நடிகை சித்ராவின் மரணம் தற்கொலைதான் என்று பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் அவரது முகத்தில் இருந்த காயங்களும் அவருடைய நகக் கீறல்கள்தான் என்று கூறப்பட்டது.

நெஞ்சில் காயங்கள்
இருப்பினும் சித்ராவின் தற்கொலையை அவரது குடும்பத்தினர் மறுத்து வருகின்றனர். சித்ராவின் முகத்தில் மட்டும் காயங்கள் இல்லை அவரது நெஞ்சிலும் காயங்கள் இருந்தன என்றும் கூறி வருகின்றனர்.

மரணத்தில் ஏதோ மர்மம்
மேலும் சித்ரா ஒரு தைரியமான பெண் என்றும் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவர் கோழை இல்லை என்றும் அவரது மரணத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர். சித்ரா மரணம் தொடர்பாக அவரது கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நடிகருடன் ரெசார்ட்டில் நெருக்கம்
சித்ரா மரணம் தொடர்பாக சித்ராவின் தோழிகளும் நாள் தோறும் ஒரு தகவலை கூறி வருகின்றனர். அந்த வகையில் சித்ரா, விஜய் டிவியின் பிரபலமும் சினிமா நடிகருமான ஒருவரை காதலித்ததாகவும், இருவரும் காதலிக்கும் போது ரெசார்ட்டில் தனிமையில் நெருக்கமாக இருந்ததாகவும் அவருக்கு நெருங்கிய தோழி ஒருவர் கூறினார்.

சித்ராவுக்கு பயம்
நெருக்கமான வீடியோக்களை காட்டி அந்த நடிகர் சித்ராவை மிரட்டியதாகவும் கூறினார். திருமணத்திற்கு பிறகும் சித்ராவை அந்த நடிகர் தொல்லை செய்து வந்ததாகவும், வீடியோவை ஹேமந்திடம் காட்டி விடுவதாக மிரட்டியதாகவும் கூறினார். இதனால் சித்ரா பயத்துடனேயே இருந்ததாகவும் கூறினார்.

நடிகர் ஆசிம் பகீர்
இந்த தகவல் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்த நடிகர் கைது செய்யப்படுவாரா என்ற தகவலும் தீயாய் பரவி வருகிறது. இந்நிலையில் நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக பிரபல நடிகரான ஆசிம் பகீர் தகவல்களை கூறியுள்ளார்.

ஸ்டார்ட் மியூஸிக்கில் ஜாலி
இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் சித்ரா, ரொம்பவும் தைரியமான பெண் என கூறியுள்ளார். மேலும் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு வரை ஸ்டார்ட் மியூஸிக் நிகழ்ச்சி படப்பிடிப்பில் அவ்வளவு ஜாலியாக இருந்துள்ளார்.

எப்படி தூக்கு போட்டார்?
அப்படி இருந்தவர் அடுத்த சில மணி நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது எப்படி என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் சித்ரா தங்கியிருந்த ஹோட்டல் அறையில் ஃபேன் இல்லை என்று கூறப்படும் நிலையில் அவர் எப்படி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும் கேட்டுள்ளார்.

நெஞ்சில் குத்தியிருக்கிறார்கள்
மேலும் சித்ராவின் முகத்தில் உள்ள நகக்கீறல்கள் அவருடையதுதான் என்கிறார்கள். ஆனால் அவரது நெஞ்சிலும் காயம் இருக்கிறதே எப்படி என்று என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். சித்ராவின் நெஞ்சில் யாரோ ஓங்கி குத்தியிருக்கிறார்கள் என்றும் கூறியிருக்கிறார் ஆசீம்.

நண்பர் சம்பந்தப்பட்டிருக்கலாம்
மேலும் சித்ராவின் மரணத்தில் ஹேமந்தின் நண்பர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும் ஆசீம் சந்தேகம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பல்வேறு பிரபலங்களும் சித்ராவின் மரணத்தில் சந்தேகம் எழுப்பி வரும் நிலையில் ஆசிம் சந்தேகமும் பரபரப்பை கிளப்பியுள்ளது.


Click it and Unblock the Notifications











