கடவுள் எனக்கு துரோகம் செய்துவிட்டார்.. நிறைய ஏமாந்துட்டேன்.. காதலி மீது காண்டான பப்லு!

சென்னை: நடிகர் பப்லு பிரித்விராஜ் வாழ்க்கையில் நிறைய ஏமாந்துவிட்டேன் என்று பேட்டியில் விரக்தியாக பேசி உள்ளார்.

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக நடிகராக இருப்பவர் பிரித்திவிராஜ். இவர் பெரும்பாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லனாகவும் நடித்துள்ளார்.

Actor Babloo Prithiveeraj and sheetal brokeup

இவர் எம் ஜி ஆர், சிவாஜி கணேசன் படங்களில் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் பப்லு பிரித்விராஜ்: நடிகர் பப்லு சினிமா உலகிற்கு வந்து நாற்பது வருடங்களுக்கு மேலாகிவிட்ட போதிலும் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் இதுவரை 200 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்.

சீரியல்களில் பிஸி: சினிமா மட்டுமில்லாமல்,சின்னத்திரையில் மர்மதேசம், அரசி, வாணி ராணி போன்ற பல்வேறு தொடர்களில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று முடிவடைந்த கண்ணான கண்ணே தொடரில் கதாநாயகிக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

காதலி ஷீத்தல்: இவர் தன்னுடைய முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், மலேசியாவை சேர்ந்த ஷீத்தல் என்பவருடன் உறவில் இருந்தார். அந்த பெண்ணுக்கு 24 வயதும் இவருக்கு 57 வயதும் இருந்ததால். இணையத்தில் படுமோசமான விமர்சனங்கள் வந்தன. இதையடுத்து, கடந்த ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது.

பிரிந்துவிட்டார்களா: இதையடுத்து, பிரித்திவிராஜ் அண்மையில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதை பார்த்த பலரும் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்களா? சண்டையா? என்று இணையத்தில் செய்தி பரவியது. இது உண்மை என்பது, போல பப்லுவும் ஷீத்தலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து இருவரும் ஒன்றாக இருந்த போட்டோ மற்றும் வீடியோக்களை டெலிட் செய்து விட்டனர்.

வேதனை பேட்டி: இந்நிலையில், பப்லு பிரித்திவிராஜ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், நான் ஷீத்தலை பிரிந்து விட்டேன் என்று நான் எங்கேயாவது கூறினேனா..? அல்லது ஷீத்தல் எங்கேயாவது கூறினாரா..? நீங்களாக நாங்கள் பிரிந்து விட்டோம் என்கிறீர்கள்.. நீங்களாக நாங்கள் சேர்ந்து விட்டோம் என்கிறீர்கள்.

நிறைய ஏமாந்துவிட்டேன்: மேலும், ஷீத்தல் குறித்து அனைத்து கேள்விகளுக்கும் ஒரு விதமான விரக்தியான மனநிலையிலேயே பதில் அளித்தார். மேலும், நான் வாழ்க்கையில் நிறைய ஏமாற்றத்தை சந்தித்து இருக்கிறேன், இனி மேலும் திருந்தவில்லை என்றாள் நான் முட்டாள் என்று அர்த்தம், இப்போது தான் எல்லாமே புரிகிறது என்று விரக்தியாக பேசினார்.

கடவுள் செய்த துரோகம்: மேலும், கடவுள் எனக்கு துரோகம் செய்துவிட்டார், சினிமாவில் வாய்ப்பு, அழகு, நல்ல உடலை கொடுத்த கடவுள் வாழ்க்கையை தொங்கலில் விட்டு விட்டார் என்று மன வேதனையுடன் பேசினார். இதன் மூலம் இருவரும் பிரிந்து தான் இருக்கிறார்கள் என்பதை உறுதியாகக் கணிக்க முடிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X