“அஜித்திற்கு நடிப்பைவிட பிரியாணி செய்யத்தான் ஆர்வம் அதிகம்”..பிரபல நடிகரின் சர்ச்சைப் பேச்சு!

நடிகர் அஜித்திற்கு நடிப்பதில் அவ்வளவாக ஆர்வம் இல்லை என நடிகர் பப்லு பிரித்விராஜ் கூறியிருக்கிறார்.

சென்னை: நடிகர் அஜித்திற்கு நடிப்பை விட பிரியாணி செய்வதில் தான் ஆர்வம் அதிகம் எனக் கூறி அஜித் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகியிருக்கிறார் நடிகர் பப்லு பிரித்விராஜ்.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, நாயகனாக நடித்து, பின் குணச்சித்திர நடிகராக மாறியவர் நடிகர் பப்லு பிரித்விராஜ். நீண்ட காலமாக நடித்து வருபவர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு. சினிமா மட்டுமின்றி சீரியலிலும் இவர் மிகவும் பிரபலம். சமீபத்தில் சன் டிவியில் நிறைவடைந்த வாணி ராணி சீரியலில் கூட ராதிகாவின் கணவராக முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், இணையதள ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் நடிகர் அஜித் மற்றும் சூர்யா பற்றி அவர் கூறிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அஜித்தின் ஆர்வம்:

அஜித்தின் ஆர்வம்:

அப்பேட்டியில் சில நடிகர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்களின் பிளஸ் மற்றும் மைனஸ் என இரண்டையும் கூறியுள்ளார் பப்லு. அதில், அஜித் பற்றி கூறுகையில், "அஜித் மிகவும் மரியாதையான மனிதர், ஸ்டைலிஷான நடிகர். ஆனால் அவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் கிடையாது. ஜீரோ டெடிக்கேஷன் நபர். அவருக்கு அதிர்ஷ்டம் வீடு தேடி வருகிறது. பிரியாணி சமைப்பதில் தான் அதிக ஆர்வம் உள்ளது" எனக் கூறியுள்ளார்.

சூர்யாவின் மனநிலை:

சூர்யாவின் மனநிலை:

இதே போல், நடிகர் சூர்யா பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, "சூர்யா மிகவும் ஈடுபாட்டுடன் நடிக்கும் நடிகர். ஆனால் உலகமே தன்னைச் சுற்றி இயங்குகிறது என்கிற மனநிலையில் இருப்பதாக தான் கருதுவதாகவும், அவரது நடிப்பு காலம் முடிந்து விட்டது" எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பப்லு.

மம்முட்டிக்கு பாராட்டு:

மம்முட்டிக்கு பாராட்டு:

பின் பிரபல மலையாள நடிகர் மம்முட்டி பற்றிய கேள்விக்கு, "நல்ல நடிகர், நிறைய பேச விரும்புவார். நான் கிளம்புகிறேன் என கூறினால் கூட, தன்னை அமர்ந்து பேசுவார். அவர் ஒரு நல்ல மனிதர் அதே நேரத்தில் சிறந்த நடிகர்" என அவர் கூறியுள்ளார்.

அஜித்தின் வில்லன்:

அஜித்தின் வில்லன்:

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார் பப்லு. ரஜினியின் 'நான் சிவப்பு மனிதன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள அவர், அஜித்துடன் 'அவள் வருவாளா' படத்தில் வில்லனாகவும், சூர்யாவுடன் வாரணம் ஆயிரம், நாகார்ஜுனாவுடன் பயணம், மம்முட்டியுடன் அழகன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X