ஷீத்தலுடனான காதல்.. பணத்துக்காக வரவில்லை.. பப்லு இப்படி ஓபனாக பேசிட்டாரே

சென்னை: நான்கு சுவர்கள் படத்தின் மூலம் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பப்லு பிருத்விராஜ். அந்தப் படத்துக்கு பிறகு சிறு வயதிலேயே பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், ரஜினிகாந்த், கமல் ஹாசன் என பல ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார் பிருத்விராஜ். இந்தச் சூழலில் ஷீத்தலுடன் தனக்கு இருந்த காதல் குறித்து ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார் அவர்.

பப்லு பிருத்விராஜுக்கு சினிமா ஆசை இருந்ததற்கு முன்பே அவரது தந்தைக்கு சினிமா ஆசை இருந்தது. இன்னும் சொல்லப்போனால் காதலிக்க நேரமில்லை படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது அவர்தான். ஆனால் அவரது கண்ணில் ஒரு குறைபாடு இருந்ததால் அதிலிருந்து நீக்கப்பட்டார். இதை மிகப்பெரும் அசிங்கமாக உணர்ந்த அவரது தந்தை பிறகு போக்குவரத்து காவல் துறையில் உதவி ஆய்வாளராக மாறிவிட்டார் . தன்னை அசிங்கப்படுத்திய சினிமாவுக்குள் மகனை கொண்டு வந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து எப்படியோ பப்லுவை உள்ளே கொண்டு வந்துவிட்டார்.

முன்னணி நடிகர்: குழந்தை நட்சத்திரமாக இருந்த பப்லு வளர்ந்த பிறகும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன்படி அவர் நடித்த பல படங்கள் ஹிட்டாகின. பாண்டிநாட்டு தங்கம், சிகரம், அழகன் என தொடர்ந்து பல படங்களில் நடித்தார். முக்கியமாக 90களில் ஃபேமஸான நடிகராக வலம் வந்தார் அவர். சூழல் இப்படி இருக்க பீனா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

Actor Babloo Prithviraj talks about Ex Lover Sheethal

விவாகரத்து; லிவிங் டூ கெதர்: பீனாவுக்கும் பப்லுவுக்கும் ஒரு மகன் இருக்கிறார். அவருக்கு ஆட்டிஸம் குறைபாடு இருக்கிறது. இருந்தாலும் இரண்டு பேரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். பீனாவை பிரிந்த அவர் ஷீத்தல் என்பவருடன் லிவிங் டூ கெதரில் இருந்தார். ஆனால் அந்த ரிலேஷன்ஷிப்பும் முடிந்துவிட்டதாக கூறப்பட்டது. இருந்தாலும் அதுகுறித்து எந்த விளக்கமும் பிருத்விராஜோ, ஷீத்தலும் கூறாமல் இருந்தனர். அதனையடுத்து தாங்கள் பிரிவதாக அவர்களும் அறிவித்துவிட்டனர்.

ஷீத்தல் அளித்த விளக்கம்: இதுகுறித்து ஷீத்தல் அளித்திருந்த விளக்கத்தில், 'பப்லுவும் நானும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். நாங்கள் லிவின் ரிலேஷன்ஷிப்பில்தான் இருந்தோம்.எங்களது உறவு நாங்கள் நினைத்தபடி இருக்கவில்லை. அதனால் இருவரும் இப்போது பிரிந்திருக்கிறோம். இரண்டு பேரும் சேர்ந்திருந்தது மிகவும் மகிழ்ச்சியான தருணமாக அமைந்தது. ஆனால் இது இரண்டு பேரும் பிரிவதற்கான நேரம். எங்களின் இந்த முடிவை அனைவரும் மதித்து எங்களுக்கான நேரத்தை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிந்தார்.

பப்லு பேட்டி: இந்நிலையில் ஷீத்தலுடனான காதல் குறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார் பப்லு பிருத்விராஜ். அந்தப் பேட்டியில் அவர், "சுகர் டேடி என்றால் என்ன அர்த்தம் என்று யாருக்குமே தெரிவதில்லை. பாவம். ஒருமுறை என்னுடைய வங்கி கணக்கில் ஒரு ரூபாய்கூட இல்லை. நான் ஒரு சின்ன அப்பார்ட்மெண்ட்டில் 20,000 ரூபாய் வாடகைக்கு தங்கியிருந்தேன். அப்படி இருக்கும்போதுதான் அந்த பெண்ணை (ஷீத்தல்) சந்தித்தேன்.

ஷீத்தலின் குடும்பம்: அவரது தந்தை ஆந்திராவில் காவல் துறை ஆணையராக இருக்கிறார். அவரது அம்மா ஒரு வழக்கறிஞர். அந்தப் பெண் ஒரு கோடீஸ்வரி. என் பணத்துக்காக அந்தப் பெண் வரவில்லை. என்னுடைய அழகுக்கும், அறிவுக்குக்காகவும்தான் வந்தார்கள். நான் அதிகபட்சமாக பணத்தை வைத்து காதலை வாங்கினால்தான் அதற்கு சுகர் டேடி என்று அர்த்தம்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X