24 வயது காதலியை கரம்பிடிக்கும் பப்லு பிரித்விராஜ்.. இணையத்தில் கசிந்த தகவல்!
சென்னை : நடிகர் பப்லு பிரித்விராஜ் இளம் பெண் ஷீத்தலை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமா உலகில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் பப்லு என்கிற பிரித்திவிராஜ்.
இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழியில் சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
சீரியலில் பிஸியாக நடித்து வரும் பப்லு பிரித்விராஜ், கடந்த ஆண்டு பொதுநிகழ்ச்சியில், என்னை ஆரோக்கியமாக கவனித்து கொள்வது என் மனைவி தான் என 24 வயது இளம் பெண் அறிமுகம் செய்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இணையவாசிகள், பல்லுவை கண்டபடி விளாசினார்கள்.

நடிகர் பப்லு பிரித்விராஜ்
இதையடுத்து, பல யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த பப்லு பிரித்விராஜ், நடிகர்களுக்கு என்று தனியாக வாழ்க்கை இருக்காதா, நான் 24 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக பல சேனல்களில் செய்திகள் வந்துள்ளது. உண்மையில் எங்களுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை, நாங்கள் லிவ்விங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் தான் இருக்கிறோம் என்றார்.

திருமணம் ஆகவில்லை
எங்கே போனாலும் நானும் அவளும் சேர்த்து தான் போவோம் அப்போது அனைவரும் யார் யார் என்று கேட்டதால் என் மனைவி என்றேன். உண்மையில் திருமணம் ஆகவில்லை என்றார். ஆனால், கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்வோம். 57 வயதில் 24 வயது பெண் கேக்குதா என்றும், பொம்பள சோக்கு கேக்குதா என பலர் கேட்கின்றனர்.

பொம்பள சோக்கு கேக்குதா
என்னை பாருங்க நான் எவ்வளவு இளமையாக இருக்கிறேன், உடம்பை எப்படி பிட்டாக வைத்து இருக்கிறேன், ஆமாம், எனக்கு பொம்பள சோக்கு கேக்குது என்று அதிரடியாக பதில் அளித்து அனைவரின் வாயையும் அடைத்தார். மேலும், ஷீத்தலிடம் பலமுறை வயதானவனை ஏன் லவ் பண்ணே என்று கேட்டு இருக்கிறேன். அதற்கு அவள் உங்களின் வயது எனக்கு தெரியவில்லை, நீங்கள் மட்டும் தான் எனக்கு தெரிகிறீர்கள் என்று கூறினார்.

இணையத்தில் வெளியான தகவல்
இணையத்தில் இவர்களின் விவகாரம் புயலை கிளப்பி சற்று ஓய்ந்த நிலையில், தற்போது பப்லு பிரித்விராஜ் மற்றும் ஷீத்தல் திருமணம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பப்லு ஷீத்தலை அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இது எந்த அளவுக்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











