Babloo : பப்லுவிடம் மன்னிப்பு கேட்ட ஷாலினி.. கேட்க சொன்னதே அஜித்தானாம்!

சென்னை : நடிகர் பப்லு என்கிற பிரித்விராஜ் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னட மொழிப் படங்களில் நடித்து வருகிறார்.

சீரியல்களில் கவனம் செலுத்திவரும் பப்லு, கடந்த 199ம் ஆண்டிலிருந்து இவர் சீரியல்களில் நடித்து வருகிறார். கே பாலசந்தரின் சீரியல்களில் இவர் அதிகமாக நடித்துள்ளார்.

Actor Babloo revealed the incident that Actress Shalini asks sorry to him

தற்போது இவர் மீண்டும் சீரியல்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான கண்ணான கண்ணே சீரியல் இவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்தது.

பப்லுவிடம் மன்னிப்பு கேட்ட ஷாலினி : நடிகர் பப்லு குழந்தை நட்சத்திரமாகத்தான் தன்னுடைய வாழ்க்கையில் சினிமாவில் துவங்கினார். தொடர்ந்து திரைப்படங்கள், சீரியல்களில் அதிகமாக நடித்து வருகிறார். 1990ம் ஆண்டுகளில் இவரது சீரியல் பயணம் துவங்கி தொடர்ந்தது. கே பாலசந்தரின் ரமணி வெர்சஸ் ரமணி உள்ளிட்ட சீரியல்களில் இவரை அதிகமாக பார்க்க முடிந்தது. இந்நிலையில் சினிமாவில் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிப் படங்களில் இவர் அதிகமாக நடித்துள்ளார்.

நாகா இயக்கத்தில் வெளியான மர்மதேசம் தொடரிலும் முக்கியமான ரோலில் பப்லு நடித்துள்ளார். தொடர்ந்து கே பாலசந்தரின் வானமே எல்லை படத்திலும் அஜித்துடன் இணைந்து அவள் வருவாளா படத்தில் நெகட்டிவ் ரோலிலும் நடித்து சிறப்பான பெயரை பெற்றிருந்தார் பப்லு. கடந்த 1994ம் ஆண்டில் பீனா என்பவரை பப்லு திருமணம் செய்துக் கொண்ட நிலையில், இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு இருந்ததையடுதது இவர்களுக்கு இடையில் கருத்து மோதல் ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.

இந்நிலையில் தற்போது தன்னுடைய 56வது வயதில் இரண்டாவது திருமணம் செய்துள்ளார் பப்லு பிரித்விராஜ். இந்த வயதில் அவர் திருமணம் செய்துள்ளார் என்பதைக்காட்டிலும் தன்னைவிட பாதி வயது குறைந்த பெண்ணை அவர் திருமணம் செய்துள்ளது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ஷீத்தல் என்ற 23 வயது பெண்ணை பப்லு திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தன்னுடைய படங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக் கொண்டுள்ளார் பப்லு.

தெலுங்கில் அதிகமான படங்களில் நடித்துள்ள பப்லு, அங்குள்ள ஹீரோக்களின் மனநிலை, தன்னுடைய குழந்தை பிறப்பு போன்ற விஷயங்கள் தனக்கு ஒரே நேரத்தில் மனஉளைச்சலை தந்ததால், அங்கிருந்த சொத்துக்களை விற்றுவிட்டு மீண்டும் சென்னையிலேயே செட்டிலாகிவிட்டதாக தெரிவித்துள்ளார். தெலுங்கில், வில்லன்கள் உயிரைக் கொடுத்து நடித்தாலும், தன்னை விட அதிகமான பெயரை பெற்று விடக்கூடாது என்பதற்காக வில்லன்களின் காட்சிகளை ஹீரோக்கள் நீக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கும் என்றும், இதை தெலுங்குப் படங்களில் தான் அதிகமாக அனுபவித்துள்ளதாகவும் பப்லு தெரிவித்துள்ளார்.

ஆனால் தமிழில் வில்லன்கள் பவர்புல்லாக இருந்தால்தான் தன்னுடைய கேரக்டர் பேசப்படும் என்பதில் ஹீரோக்கள் மிகவும் தெளிவாக உள்ளதாகவும் பப்லு தெரிவித்துள்ளார். இதனிடையே ஷாலினி தன்னிடம் மன்னிப்பு கேட்ட சம்பவத்தையும் பப்லு நினைவு கூர்ந்துள்ளார். ஒரு ரெஸ்டாரெண்டில் ஷாலினியும் தானும் அடிக்கடி சந்தித்துக் கொண்டதாகவும் ஆனால் அவருடன் இணைந்து தான் நடித்ததில்லை என்பதால் அவருடன் பேச தான் தயங்கியதாகவும் பப்லு தெரிவித்தார்.

ஆனால் ஒருகட்டத்தில் ஓட்டல் ஊழியரிடம் இருந்து பப்லுவின் போன் நம்பர் வாங்கி அவரிடம் பேசிய ஷாலினி, அவருடன் தான் நடிக்காததால், அவருடன் பேசுவது டிஸ்டர்பாக இருக்குமோ என்று நினைத்து தான் பேசவில்லை என்றும், ஆனால் இதுகுறித்து அஜித்திடம் தான் கூறிய நிலையில், அவர் மிகவும் பீல் செய்ததாகவும் அப்படி செய்வது மோசமான மேனர்ஸ் என்று அவர் கூறியதாகவும் ஷாலினி பப்லுவிடம் கூறியுள்ளார்.

Actor Babloo revealed the incident that Actress Shalini asks sorry to him

பப்லு ஒரு சீனியர் என்றும் அவரிடம் பேசுவது தான் முறையாக இருக்கும் என்று ஷாலினிக்கு அட்வைஸ் கொடுத்த அஜித், அவரிடம் சாரி கேட்கவும் அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்தே பப்லுவிடம் ஷாலினி மன்னிப்பு கேட்டதாக பப்லு தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் பப்லு, அஜித் குறித்து அவரது பண்பு குறித்து பேசியுள்ள இந்த வீடியோ அஜித் ரசிகர்களை மிகுந்த உற்சாகப்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X