ஒரேயொரு கேள்வி கேட்ட வாணி ராணி சீரியலின் உதவி இயக்குனரை அறைந்த நடிகர் பப்லு

By Siva

Recommended Video

வாணி ராணி சீரியலின் உதவி இயக்குனரை அறைந்த நடிகர் பப்லு - வீடியோ

சென்னை:வாணி ராணி சீரியலின் உதவி இயக்குனராக உள்ள அழகுவை நடிகர் பப்லு கன்னத்தில் அறைந்துள்ளார்.

ராதிகா சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்து வரும் தொலைக்காட்சி தொடர் வாணி ராணி. இந்த தொடரில் பப்லு சாமிநாதன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ராணியாக நடிக்கும் ராதிகாவின் கணவராக நடித்து வருகிறார் பப்லு.

ஷூட்டிங்

ஷூட்டிங்

பல ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கும் வாணி ராணி சீரியல் இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடித்தது. இந்த சீரியல் ஷூட்டிங்கிற்கு பப்லு எப்பொழுதுமே தாமதமாக தான் வருவார் என்று கூறப்படுகிறது.

கேள்வி

கேள்வி

பப்லு வழக்கம் போன்று தாமதமாக வர சீனியர் உதவி இயக்குனரான அழகு அவரிடம் கேள்வி கேட்டுள்ளார். ஏன் லேட்டாக வந்தீர்கள் என்று அழகு கேட்டதும் பப்லு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

பப்லு தினமும் லேட்டாக வருவது மற்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறித்து உதவி இயக்குனர் தயாரிப்பு நிறுவனத்திடம் புகார் தெரிவித்துள்ளார். அவர்களும் பப்லுவை அழைத்து எச்சரித்துள்ளனர்.

அறை

அறை

தயாரிப்பு நிர்வாகம் தன்னை அழைத்து எச்சரித்ததை அடுத்து பப்லுவுக்கு அழகு மீது கோபம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அழகுவுடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பேசிக் கொண்டிருந்தபோதே பப்லு அழகுவின் கன்னத்தில் அறைந்துவிட்டாராம்.

பாட்டி

பாட்டி

ராதிகாவின் மகள் ரயனுக்கு கடந்த வாரம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தான் பாட்டி ஆகியுள்ள மகிழ்ச்சியில் உள்ளார் ராதிகா. இந்நிலையில் பப்லுவின் சம்பவத்தால் சின்னத் திரை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வாணி ராணி சீரியலை ராதிகா தான் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X