குவியும் வாய்ப்புகள்.. 23 படங்களில் நடிக்கும் பப்லு பிரித்விராஜ்.. எதனால இந்த மாற்றம் தெரியுமா?

சென்னை: நடிகர் பப்லு பிரித்விராஜ் ஏராளமான திரைப்படங்கள், சீரியல்கள் என அடுத்தடுத்து நடித்து மிகவும் பிரபலமானவர். சன் டிவியில் இவர் நடிப்பில் சமீபத்தில் முடிந்துள்ள கண்ணான கண்ணே சீரியல் ஏராளமான ரசிகர்களை இவருக்கு பெற்றுக் கொடுத்துள்ளது. கடந்த ஆண்டில் இவரது நடிப்பில் வெளியான அனிமல் படம் மிகப்பெரிய அளவில் இவருக்கு கை கொடுத்துள்ளது.

அனிமல் படத்திற்கு முன்னதாக தான் மிகப்பெரிய மன உளைச்சலில் இருந்ததாகவும் இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏராளமான படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருவதாக பப்லு பிரித்விராஜ் பெருமையுடன் கூறியுள்ளார். அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கி வரும் இவருக்கு ஏராளமான படங்கள் கிடைத்து வருவது சிறப்பாக பார்க்கப்படுகிறது.

bablu prithviraj animal movie tamil cinema

நடிகர் பப்லு பிரித்விராஜ்: பப்லு என்று அழைக்கப்படும் நடிகர் பிரித்விராஜ் தன்னுடைய ஆரம்ப காலத்திலேயே மறைந்த கே பாலச்சந்தர் இயக்கத்தில் படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் டிவி பக்கம் ஒதுங்கினார். அடுத்தடுத்த சீரியல்களில் நடித்து வந்தார். நடிகை ராதிகாவுடன் இணைந்து வாணி ராணி சீரியலிலும் லீட் கேரக்டரில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்த பப்லு நடிப்பில் சமீபத்தில் கண்ணான கண்ணே சீரியல் நிறைவடைந்துள்ளது.

அடுத்தடுத்த சர்ச்சைகள்: அடுத்தடுத்து சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார் பப்லு. சமீபத்தில் சீத்தல் என்ற 24 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டு சில மாதங்கள் சிறப்பான வகையில் வாழ்ந்த இவர், அடுத்தடுத்த வீடியோக்கள் உள்ளிட்டவற்றை வெளியிட்டு பலரையும் கடுப்புக்கு உள்ளாக்கினார். தன்னைவிட 24 வயது குறைந்த ஷீத்தலை இவர் திருமணம் செய்த நிலையில் ஒரு கட்டத்தில் இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பிரிந்து விட்டனர். இதனிடையே தற்போது அடுத்தடுத்த படங்களில் பப்லு பிரித்விராஜ் பிசியாக நடிதது வருகிறார். ஷீத்தல் குறித்தும் வெளிப்படையாக பேசினார்.

அனிமல் படம் கொடுத்த புகழ்: கடந்த ஆண்டு வெளியான அனிமல் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார் பப்லு பிரித்விராஜ். இந்த படம் மிகப்பெரிய அளவில் இவருக்கு கை கொடுத்த நிலையில் தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி நடித்து வருவதாக பப்லு பிரித்விராஜ் தெரிவித்துள்ளார். தற்போது 23 படங்களில் நடிக்கும் வாய்ப்பு தனக்கு அனிமல் படத்தின் மூலம் கிடைத்துள்ளதாக பப்லு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அனிமல் படத்தில் நடிப்பதற்கு முன்னதாக தனக்கு எந்த படத்தின் வாய்ப்பும் கிடைக்கவில்லை என்றும் இதனால் தன்னம்பிக்கை எல்லாம் இழந்து விட்டு தான் மிகவும் கஷ்டப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மாறிய வாழ்க்கை: ஆனால் அனிமல் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது தன்னுடைய வாழ்க்கை மாறியுள்ளதாகவும் அதிகமான பட வாய்ப்புகள் கிடைத்து வருவதாகவும் பப்லு பிரித்விராஜ் குறிப்பிட்டுள்ளார். தமிழில் அடுத்ததாக விஜய் சேதுபதியின் ஏஸ் படத்திலும் லீட் கேரக்டரில் நடித்துள்ள பப்லு பிரித்விராஜ் தெலுங்குப் படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். அனிமல் படம் இவருக்கு பான் இந்தியா ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றுக் கொடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X