Bablu Prithviraj: சில விஷயங்களை பேசினால் செருப்பால் அடிப்பார்கள்.. பப்லு வேதனை!
சென்னை: நடிகர் பப்லு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஷீத்தல் என்ற பெண்ணுடன் லிவிங் டுகெதரில் இருந்து வந்த நிலையில் தற்போது அவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்துள்ளனர்.
தன்னைவிட 30 வயது குறைந்த பெண்ணுடன் உறவில் இருந்தார் என்று முன்னதாக பப்லு மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது இவர்களது பிரிவும் அடுத்தடுத்த சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தற்போது அடுத்தடுத்த பேட்டிகளை பப்லு கொடுத்து வருகிறார். அவரது பேட்டிகளில் கோபம் அதிகமாக வெளிப்பட்டு வருகிறது.
நடிகர் பப்லு பிரித்விராஜ்: நடிகர் பப்லு நீண்ட காலங்களாக கோலிவுட்டில் நடித்து வருகிறார். ஹீரோவாக நடித்துவந்த பப்லு, தொடர்ந்து கேரக்டர் ரோல்களிலும் வில்லனாகவும் காமெடியனாகவும் நடித்து அசத்தினார். சினிமாவில் மட்டுமில்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் இவர் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருந்துவரும் பப்லு, தன்னுடைய பிட்னசில் அதிகமான கவனம் கொண்டவர்.
பப்லு -ஷீத்தல் காதல்: 50 வயதை கடந்த பப்லு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஷீத்தல் என்ற 23 வயது பெண்ணை காதலிப்பதாக தெரிவித்தார். 30 வயது வித்தியாசத்தில் இவர்களது காதல் அதை தொடர்ந்த லிவிங் டு கெதர் வாழ்க்கை அதிகமான சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் இவர்கள் இருவரும் கூட்டாக அளித்த பேட்டிகள் மற்றும் யூடியூப் வீடியோக்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் தற்போது இருவரும் பிரிந்து விட்டதாக அறிவித்துள்ளனர்.
பப்லு -ஷீத்தல் பிரேக்அப்: இவர்கள் இருவரும் இணைந்தபோது இருந்த பரபரப்பு தற்போதும் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து அடுத்தடுத்த பேட்டிகளை தற்போது பப்லு கொடுத்து வருகிறார். அதில் அவரது கோபம் அதிகமாக வெளிப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடிகை ஷகிலாவிற்கு அளித்த பேட்டியிலும் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து மட்டுமே கேள்விகளை கேட்க வேண்டும் என்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பேசக்கூடாது என்றும் முன்னதாக அவர் நிபந்தனை விதித்திருந்தார்.
செருப்பால் அடிப்பார்கள்: தொடர்ந்து பேசிய பப்லு பிரித்விராஜ், தான் சில விஷயங்கள் குறித்து பேசினாலும் செருப்பால் அடிப்பார்கள், இல்லையென்றாலும் செருப்பால் அடிப்பார்கள் என்று பேசினார். மேலும் உனக்கு இது தேவைதான் என்றும் பலரும் பேசுவார்கள் என்றும் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார். தொடர்ந்து தன்னுடைய வாழ்க்கை குறித்த பயில்வான் ரங்கநாதனின் பேச்சையும் அவர் கேள்விக்குட்படுத்தியுள்ளார்.
பயில்வான் குறித்து ஆத்திரம்: பயில்வான் ரங்கநாதனும் ஒரு நடிகர்தானே, அவர் தன்னுடைய வீட்டு பெண்கள் பெட்ரூமில் என்றெல்லாம் பேசுவாரா என்றும் கோபத்துடன் கேள்வி எழுப்பினார். ஒரு யூடியூபிற்காக இவ்வாறு பேசுவதாகவும் விமர்சித்தார். மற்றவர்களை தரக்குறைவாக பேசுவதுதான் அவருக்கு சோறு போடுவதாகவும் பப்லு ஆத்திரப்பட்டார். தன்னுடைய பர்சனல் வாழ்க்கை குறித்து பேசியிருக்கக்கூடாது என்றும் அந்தத் தவறை தான் இனிமேல் செய்ய மாட்டேன் என்றும் பப்லு பிரித்விராஜ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











