Leo: விஜயின் கதாபாத்திர பெயர் இதுதானா? நடிகர் பாபு ஆண்டனி கொடுத்த சர்ப்ரைஸ்!
சென்னை: தளபதி விஜய் நடிக்கும் லியோ படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயர் குறித்த தகவலை பாபு ஆண்டனி தெரிவித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில், அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் முதல் பாடல் விஜயின் பிறந்த நாள் அன்று நா ரெடி தான் வரவா பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்தது.
பாபு ஆண்டனி: லியோ படம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ள நிலையில், படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில், லியோ படத்தில் நடித்துள்ள பாபு ஆண்டனி படம் குறித்து பல தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில்,லீயோ படத்தில் விஜய்யுடன் நடிப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. மலையாளப்படம் ஒன்றைப் பார்த்துவிட்டுத்தான் லோகேஷ் கனகராஜ் லியோ படத்தில் நடிக்க என்னை அழைத்தார். இந்த கேரக்டர் வழக்கமாக என்னைப் பார்த்து பயப்படும் கதாபாத்திரம் போல இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான கதாபாத்திரமாக இருக்கும்.
தமிழ் மக்களுக்கு நன்றி: சஞ்சத் தத் பிறந்த நாளுக்கு வெளியான கிளிம்ஸ் வீடியோவில்,சஞ்சத் தத் பின்னால் நான் நிற்றுகொண்டு இருப்பேன், அந்த சின்ன வீடியோவைப் பார்த்துவிட்டு மக்கள் பாபு ஆண்டனி என்று கண்டுபிடித்துவிட்டார்கள். இது உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ் ரசிகர்களின் மனதில் எனக்கும் ஓர் இடத்தை கொடுத்ததற்கு நன்றி.

டாக் லெஸ்..ஒர்க் மோர்: மேலும், லோகேஷ் கனகராஜ் படப்பிடிப்பில் அதிகம் பேசவே மாட்டார்கள், எதாவது முக்கியமான விஷயம் என்றால், அவருடைய டீமிடம் முதலில் கலந்து பேசிக்கொள்வார்கள், அதன் பிறகு தான் தனியாக, நடிகர்களிடம் வந்து சொல்லுவார்கள். அவருடைய பாலிசியே டாக் லெஸ்... ஒர்க் மோர் தான்.
கேரக்டர் பெயர்: லியோ திரைப்படம் ரொம்ப வித்தியாசமான மாஸ் திரைப்படமாக இருக்கும். இந்த படத்தில் விஜய்யுடன் பல காட்சிகளில் நடித்து இருக்கிறேன். இப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்தின் பெயர் லியோ என்று படத்தின் பயங்கரமான சீக்ரெட்டை நடிகர் பாபு ஆண்டனி அந்த பேட்டியில் கூறியுள்ளார். ஆனால்,இது எந்த அளவுக்கு உண்மை என்பது படம் வந்தால் தான் தெரியும்.


Click it and Unblock the Notifications











