கானா பாபுவில் 3 கவர்ச்சிகள்!
தமிழ் திரையுலகின் வித்தியாசமான படைப்பாளியான பாபு கணேஷ் எடுத்து வரும் புதிய படத்தில் 3 கவர்ச்சி நடிகைகள், 5 பாடகர்கள் நடிக்கிறார்களாம்.
பாபு கணேஷ் பூஜை போட்ட படங்களின் எண்ணிக்கை நிறைய. ஆனால் முடிந்து, ரிலீஸான படங்களின் எண்ணிக்கையோ மிக மிக குறைவு. மிக மிக நிதானமாக படம் எடுப்பவர்களில் முதலிடத்தில் இருப்பவர் பாபு கணேஷ்.
நிறையப் படங்களை அறிவிப்பார். அதில் ஏதாவது எப்போதாவது வெளியாவது வழக்கம். அந்த வரிசையில் தற்போது கானா பாபு என்ற பெயரில் ஒரு புதிய படத்தை எடுத்து வருகிறார் பாபு கணேஷ். இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், இசை, பாடல்கள், ஒளிப்பதிவு, இயக்கம், தயாரிப்பு என எல்லாமே பாபு கணேஷ்தான்.
இந்த கானா பாபு படத்தில் முமைத்கான், வஹீதா, விக்டோரியா என மூன்று கவர்ச்சி நடிகைகளை கவர்ச்சிகரமாக நடிக்க வைத்துள்ளாராம் பாபு கணேஷ்.
மேலும் படத்தின் முக்கிய அம்சமாக கானா பாடர்களான கானா உலகநாதன், கானா பாலா, பாடகி சின்னப் பொண்ணு, வேல்முருகன், பாடகி மாலதி ஆகியோரும் நடிக்கிறார்களாம்.
இந்தப் படத்தின் கதை, அடித்தட்டு மக்கள் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கிறதாம்.
சரி பாபுஜி, ஏற்கனவே எடுத்து வரும் சின்ன பாப்பா, நானே வருவேன் ஆகிய படங்கள் எப்போது திரைக்கு வரும்...?


Click it and Unblock the Notifications











