Don't Miss!
- Finance சிங்கிளாக வாழும் பெண்களே.. இதை பாலோ பண்ணுங்க..!!
- News பிரியாணியால் வம்பில் மாட்டிய பிரேமலதா.. திடீரென பறந்த புகார்.. விஜயகாந்த் நினைவிடத்தில் என்ன நடந்தது
- Automobiles எல்லாரும் ஃப்ளோரிடாவுக்கு கிளம்ப போறாங்க.. ரோல்ஸ் ராய்ஸ் காரை இலவசமா தர போறாங்களாம்!! ஒரே ஒரு நிபந்தனைதான்!
- Lifestyle Today Rasi Palan 19 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனையில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது...
- Sports சிஎஸ்கே அணியின் படுமோசமான கேப்டன்கள் பட்டியல்.. தோனி கேப்டனா இருக்க காரணமே இதுதான்
- Technology புது SIM கார்டு ரூல்ஸ்.. இனி 7 நாட்களுக்கு ஒன்னுமே செய்ய முடியாது.. கஸ்டமர்கள் படப்போகும் பாடு.. எப்போது அமல்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
கார் டயர் வெடித்து விபத்து: நடிகர் பாபுகணேஷ் பலத்த காயம்
'கடல் புறா' என்ற படத்தில் பாபு கணேஷ் நாயகனாக நடித்துள்ளார். இவரே இப்படத்தை இயக்கவும் செய்தார். தாட்பூட் தஞ்சாவூர், தேசிய பறவை, நடிகை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது பாபுகணேஷ் காட்டு புறா என்ற பேய் படத்தை இயக்கி நாயகனாகவும் நடிக்கிறார். இந்த படத்துக்காக லொக்கேஷன் பார்ப்பதற்காக பாபுகணேசும் படத்தின் ஒளிப்பதிவாளர் ரவியும் கிருஷ்ணகிரிக்கு காரில் சென்றனர்.
கிருஷ்ணகிரியில் உள்ள பெங்களூர் நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டு இருந்த போது திடீரென காரின் இடது பக்க டயர் வெடித்தது. இதனால் கார் நிலை தடுமாறி தாறுமாறாக ஓடியது. திடீரென சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மேல் மோதியது.
இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. பாபு கணேசும், கேமராமேனும் தலை, மார்பு பகுதியில் பலத்த அடிப்பட்டு காயத்துடன் மயங்கி விழுந்தார். அருகில் வீடுகளில் இருந்தவர்கள் ஓடி வந்து இருவரையும் மீட்டு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.