Actor Bala: ”என் மனைவியை என்னிடம் இருந்து பிரித்தது அந்த இசையமைப்பாளர் தான்..” பிரபல நடிகர் ஓபன்!
திருவனந்தபுரம்: சூர்யாவின் கங்குவா படத்தை இயக்கி வருகிறார் சிறுத்தை சிவா. அவரது தம்பியான பாலா, தற்போது மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக மாஸ் காட்டி வருகிறார். இரு தினங்களுக்கு முன்னர் பிறந்தநாள் கொண்டாடிய பாலா, எனது மனைவியை தன்னிடம் பிரித்துவிட்டதாக பிரபல இசையமையமைப்பாளர் மீது பகிரங்கமாக குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
நடிகரின் மனைவியை பிரித்த இசையமைப்பாளர்
ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநராக வலம் வருபவர் சிறுத்தை சிவா. அஜித்தின் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களை இயக்கியுள்ள அவர் ரஜினியின் அண்ணாத்த மூவியை தொடர்ந்து, சூர்யாவின் கங்குவாவை இயக்கி வருகிறார். இவரது தம்பியான பாலா தமிழில் அன்பு திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், களிங்கா ஆகிய படங்களில் நடித்தார். ஆனாலும் தமிழில் ஜொலிக்க முடியாத பாலா, மலையாள சினிமா பக்கம் ஒதுங்கினார். தமிழில் மாஸ் காட்ட முடியாத பாலா, மலையாளத்தில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் பிரபல மலையாள சேனலில் ஒளிபரப்பான இசை நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்றார்.
அப்போது அந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற பாடகி அம்ருதா சுரேஷை காதலிக்கத் தொடங்கினார். இதனையடுத்து இருவரும் 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த அவர்களுக்கு 2012-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் பெயர் அவந்திகா ஆகும். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த பாலாவும் அம்ருதாவும், 2019ல் சட்டப்படி விவாகரத்து பெற்றனர்.
இதனையடுத்து பாடகி அம்ருதா சுரேஷ் மலையாளத்தில் பிரபல இசையமைப்பாளர் கோபி சுந்தரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து கடந்தாண்டு தான் தெரியவந்தது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் தனது பிறந்தநாளை கொண்டாடிய பாலா, இசையமைப்பாளர் கோபி சுந்தர் குறித்து காட்டமாக பேசியுள்ளார். அதில் தன் மனைவியை என்னிடம் இருந்து பிரித்தது கோபி சுந்தர் தான் என்றுள்ளார்.
அதாவது நான் அம்ருதா சுரேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டதும் உண்மை. அவரை சட்டபடி விவாகரத்து செய்ததும் உண்மை தான். ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் காரணம் யாருக்கும் தெரியாது. இது எல்லாவற்றுக்கும் இசையமைப்பாளர் கோபி சுந்தர் தான் காரணம். அவர்கள் இருவரும் எப்படி இருந்தார்கள் என எல்லாமும் எனக்குத் தெரியும். சில விஷயங்களை பொது இடத்தில் பகிர்வதில் தனக்கு விருப்பம் இல்லை.
உண்மைகளை பேசினால் அது தனது மகளின் எதிர்காலத்தை பாதிக்கும். அதேநேரம் அவர்கள் செய்த எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார். எனது மகளை கூட பார்க்க விடாமல் என்னை தடுக்கிறார்கள். இவர்கள் கொடுத்த டார்ச்சரால் நான் தற்கொலை வரை சென்று உயிர் பிழைத்தேன். இன்னொரு பக்கம் இப்போது வரையும் அம்ருதா சுரேஷ் பணம் கேட்டு மிரட்டி வருவதாக பேசியிருந்தார்.
பிறந்தநாள் விழாவில் நடிகர் பாலா இப்படி பேசியதும் ரசிகர்கள் கோபி சுந்தர், அம்ருதா இருவரையும் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கத் தொடங்கினர். இதனால் அதிர்ச்சியான அம்ருதா சுரேஷின் சகோதரி அபிராமி விளக்கம் கொடுத்துள்ளார். அதில், பாலாவின் குற்றச்சாட்டுக்கு நாங்களும் பதில் கொடுத்தால் அது இன்னும் சர்ச்சையாகும். எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது, எந்தவித புரிதலும் இல்லாமல் பாலா இப்படி பேசுவதற்கு நாங்கள் விளக்கம் கொடுக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











