டார்ச்சர் செய்தார்.. மகள் குற்றச்சாட்டு.. என் வாழ்க்கையில் மிகப்பெரிய வலி.. கதறி அழுத நடிகர் பாலா!
சென்னை: தமிழ் மற்றும் மலையாள படத்தில் நடித்து பிரபலமான நடிகர் பாலாவின் மகள் அவந்திகா, என்னையும் என் குடும்பத்தையும் டார்ச்சர் செய்தார். அவர் என் வாழ்க்கையில் குறுக்கிட வேண்டாம் என்று வீடியோ வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோவைப் பார்த்த நடிகர் பாலா, மகளை நினைத்து உருக்கமான வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
மலையாள நடிகர் பாலா, அஜித் நடித்த வீரம் படத்தில் அவரின் தம்பிகளில் ஒருவராக நடித்திருந்தார். தமிழில் இவர் ஏற்கனவே 'அன்பு' என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார்.அதைத்தொடர்ந்து 'அப்பா அம்மா செல்லம்' என்கிற படத்திலும் நடித்துள்ளார். மலையாளத்திலும் பல வெற்றிப்படத்தில் நடித்துள்ளார் பாலா.

நடிகர் பாலா: இவர் 2019ம் ஆண்டு பாடகி அம்ருதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகள் இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். இந்த தம்பதிகளுக்கு, 11 வயதில் அவந்திகா என்கிற மகள் இருக்கும் நிலையில் இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதையடுத்து, கடந்த 2021 ஆம் ஆண்டு எலிசபெத் என்ற மருத்துவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.
குறுக்கே வராதீர்கள்: இந்நிலையில், நடிகர் பாலாவின் மகள் அவந்திகா,வெளியிட்ட வீடியோவில், என் தந்தை என்னை மிகவும் நேசிப்பதாகவும், என்னை மிஸ் பண்ணுவதாகவும், எனக்கு நிறைய பரிசு பொருட்களை வாங்கி கொடுத்ததாகவும் பல பேட்டிகளில் கூறி வருகிறார். ஆனால், இது உண்மை இல்லை, என் தந்தையை நேசிக்க எனக்கு ஒரு சின்ன காரணம் கூட இல்லை, அவரை நினைக்கும் போது, என்னையும் என்னுடைய குடும்பத்தையும் செய்த டார்ச்சர், குடித்துவிட்டு என் அம்மாவை அடித்தது தான் என் கண் முன்னே வருகிறது. அந்த நேரத்தில் என்னால், என் அம்மாவிற்கு உதவ முடியவில்லை, ஆனால், அந்த வலியை நான் இப்போது உணர்கிறேன். என்னுடைய குடும்பத்தினர் என்னை நன்றாக பார்த்துக் கொள்கின்றனர். இதனால், தயவு செய்து என் வாழ்க்கையில் குறுக்கீடாதீர்கள் என்று பேசி இருந்தார்.
எப்போதுமே நீ என் குழந்தை தான்: மகளின் இந்த வீடியோவை பார்த்த நடிகர் பாலா, மகளை நினைத்து கண்ணீருடன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், என் மகள் நேற்று வெளியிட்ட வீடியோவில் என் அப்பா என்று கூறி இருக்கிறார் அதை கேட்டே நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் பப்பு. நான் உன்னுடன் விவாதம் செய்யவோ சண்டை போடவோ விரும்பவில்லை, அப்படி மகளிடம் விவாதம் செய்பவன் நல்ல ஆண்மகனே இல்லை பாப்பு. இன்று என்னுடைய வாழ்க்கையில் எப்போதையும் விட, மிக அதிக வலியை உணர்ந்தேன். உண்மையில் நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். ஆனால், ஒருபோதும் உன் அருகில் நான் வரமாட்டேன். இது கடவுள் மீது சத்தியம். நீ, ஐந்து மாத கருவாக வயிற்றில் இருக்கும் போதே உனக்கு அவந்திகா என பெயர் வைத்து அழகுப்பார்த்தவன் நான். உன் சின்ன சின்ன அசைவுகளை நான் ரசித்து மகிழ்ந்தேன். நீ எப்போதுமே எனக்கு குழந்தை தான் என்று உருக்கமாக நடிகர் பாலா அந்த வீடியோவில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











