விஷம் வைத்து கொன்றுவிடுங்கள்.. ஒரு மனுஷனை வாழ விடமாட்டீங்களா? நடிகர் பாலா கண்ணீர்!
சென்னை: இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரரான நடிகர் பாலா தமிழில் அன்பு, 'அப்பா அம்மா செல்லம்' வீரம் உள்ளிட்ட படத்தில் நடித்துள்ளார். இவர் 2010 ஆம் ஆண்டு பாடகி அம்ருதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில் இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதைத்தொடர்ந்து 2024 ஆண்டுகளுக்கு கோகிலா மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். பாலாவின் முதல் மனைவி அவர் சில புகார்களை கூறி அதுகுறித்து வழக்குகள் நடந்து வரும் நிலையில் தற்போது பாலா இதற்கு மேல் என்னால் முடிவில்லை என்னை கொன்றுவிடுங்கள் என வேதனையுடன் பேசி உள்ளார்.
இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டு இருக்கும் வீடியோவில், உணர்ச்சிகரமான மலையாளத்தில் பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளாக தனது வாழ்க்கையில் சந்தித்த வேதனைகள், மனஅழுத்தங்கள் மற்றும் வழக்குகளால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார். நான் படித்த காலத்தில் இருந்த வாழ்க்கை வேறு. இப்போது நான் வாழ்க்கை முற்றிலும் மாறிவிட்டது. கடந்த 10 ஆண்டுகளாக பெரும் துன்பத்தை அனுபவித்து வருகிறேன். திருமணம் ஆனதில் இருந்து பல விஷயங்களை வெளியில் சொல்ல முடியாமல் மனதில் வைத்துக்கொண்டு வாழ்ந்தேன். எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் அதை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு தான் இருந்தேன். சில உண்மைகளை சொல்லவே முடியவில்லை. காரணம் நான்தான். சிலரைக் காப்பாற்றுவதற்காகவே பல விஷயங்களை வெளியே பேசவில்லை.

மனதளவில் பாதிக்கப்பட்டேன்: மீடியாவில் நல்ல விஷயங்களும் வருகிறது. நல்ல செயல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார்கள். ஆனால் சிலர் வெறும் வியூஸ்க்காகவே சில பொய்யான விஷயங்களை பெரிதாக்குகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக தன்னை சுற்றி தொடர்ச்சியாக வந்த 'கேஸ்' பிரச்சனைகள், சர்ச்சைகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை சிக்கல்களால் நான் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறேன்.
விஷம் வைத்து கொன்றுவிடுங்க: இங்கே சட்டம் இருக்கிறதா? இந்த உலகத்திலேயே சட்டம் ஒன்று இருக்கா என்ற சந்தேகம் வருகிறது. அப்படியென்றால் நான் என்ன செய்ய வேண்டும்? இனி யாராவது என்னைப்பற்றி பேசினால், நான் சும்மா இருக்க மாட்டேன். அனைத்து பத்திரிக்கைகளையும் அழைத்து பிரஸ்மீட் நடத்தி எல்லா உண்மைகளையும் வெளியில் சொல்லுவேன். இதை எழுதிக்கொள்ளுங்கள், இது நிச்சயம் நடக்கும். பலரும் என்னை அழைத்து பேசுகிறார்கள். உண்மை வெளிவந்து கொண்டிருக்கிறது. அதன் பிறகு நீங்கள் பின் வாங்க முடியாது. அந்த உண்மை வெளிவரக்கூடாது என்றால் விஷம் வைத்து என்னையும் என் மனைவியையும் கொன்றுவிடுங்கள் என உருக்கமாக பேசிஉள்ளார்.


Click it and Unblock the Notifications