Actor Bala: நடிகரின் மனைவியை காதலித்த இசையமைப்பாளர்... பாலா சொல்லாமல் மறைத்த உண்மை நிறைய இருக்கு!

திருவனந்தபுரம்: இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பி பாலா, மலையாளத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அவர் தனது மனைவியை பிரிந்ததற்கு இசையமைப்பாளர் கோபி சுந்தர் தான் காரணம் எனக் கூறியிருந்தார். இந்த விவகாரம் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது மேலும் சில தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

பாலா சொல்லாமல் மறைத்த உண்மை அதிகம்
தமிழில் முன்னணி இயக்குநரான சிறுத்தை சிவாவின் தம்பி பாலா, மலையாள படங்களில் அதிகமாக நடித்து வருகிறார். முன்னதாக அவர் தமிழில் அன்பு திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், களிங்கா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

 Actor Bala: Gopi Sundar - Actor Bala controversial secret agent reveals the truth

தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் மலையாள சினிமா பக்கம் ஒதுங்கிய பாலா தற்போது முன்னணி நடிகராக காணப்படுகிறார். இதனிடையே அவரது சமீபத்திய பேட்டி மிகப் பெரிய சர்ச்சையாகியுள்ளது. பிரபல மலையாள சேனலில் ஒளிபரப்பான இசை நிகழ்ச்சியில் நடுவராக இருந்த பாலா, அதில் போட்டியாளராக பங்கேற்ற பாடகி அம்ருதா சுரேஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு 2012-ம் ஆண்டு அவந்திகா என்ற பெண் குழந்தையும் பிறந்தது. ஆனால் திடீரென 2019ம் ஆண்டு இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர். மகள் அவந்திகா அம்ருதா சுரேஷுடன் வாழ்ந்து வருகிறார். அம்ருதா சுரேஷை விவாகரத்து செய்ததால், அவருக்கு ஜீவனாம்சமும் கொடுத்துள்ளார் பாலா. ஆனாலும் மகள் அவந்திகாவை பார்க்க விடாமல் தடுப்பதாகவும், தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டுவதாகவும் அம்ருதா சுரேஷ் மீது குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் பாலா.

ஒருகட்டத்தில் தான் தற்கொலைக்கு முயன்றதாகவும் பாலா கூறியிருந்தார். இதனிடையே அம்ருதா சுரேஷ் பிரபல இசையமைப்பாளர் கோபி சுந்தரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து சமீபத்தில் பாலா பேசிய வீடியோ மலையாள திரையுலகில் பெரும் புயலை கிளப்பியது. அதில் தன் மனைவியை என்னிடமிருந்து பிரித்தது கோபி சுந்தர் தான் எனவும், அவர்கள் இருவரும் எப்படி இருந்தார்கள் என எல்லா ரகசியங்களும் எனக்குத் தெரியும் என தடாலடியாக கூறியிருந்தார்.

மேலும், சில உண்மைகளை பேசினால் அது தனது மகளின் எதிர்காலத்தை பாதிக்கும் எனவும் உருக்கமாக பேசியிருந்தார். இதனையடுத்து கோபி சுந்தர், அம்ருதா சுரேஷ் இருவரையும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவம் பற்றி பாலாவின் நண்பர் சாய் கிருஷ்ணா என்பவர் விளக்கம் கொடுத்துள்ளார். கோபி சுந்தர் குறித்து பாலா தன்னிடம் பலமுறை பேசியுள்ளார். ஆனால், அவர் பொதுவெளியில் இப்படி பேசுவார் எனத் தெரியாது என்றுள்ளார

மேலும், தனது மகளை பார்க்காமல் இருப்பது பாலாவுக்கு வேதனையாக இருக்கலாம். அதனால் தான் அவர் சில உண்மைகளை கூறிவிட்டார். அதேநேரம் கோபி சுந்தர் - அம்ருதா சுரேஷ் பற்றி பாலா இன்னும் வெளியே சொல்லாத உண்மைகள் அதிகம் உள்ளன. பாலா இன்னும் உண்மைகளை வெளியே சொன்னால் அது அவரது மகளுக்கு பாதிப்பாகும் என பேசாமல் இருப்பதாக சாய் கிருஷ்ணா குறிப்பிட்டுள்ளார். இதனால் பாலா - கோபி சுந்தர் இடையேயான பிரச்சினை இன்னும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X