வாழ்வில் அழகான தவறுகள்.. 2 வது திருமணம் செய்கிறாரா? பிரபல நடிகரின் முன்னாள் மனைவி அதிரடி விளக்கம்!
கொச்சி: தனது மறுமணம் பற்றி வந்த தகவலுக்கு, பிரபல ஹீரோவின் முன்னாள் மனைவி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழில் அன்பு படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் பாலா. பிறகு, காதல் கிசு, கலிங்கா, அம்மா அப்பா செல்லம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தார்.
மலையாளத்திலும் நடிக்கத் தொடங்கிய பாலா, அங்கு ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்குனர் 'சிறுத்தை' சிவாவின் தம்பி.

பாடகி அம்ருதா சுரேஷ்
'வீரம்' படத்தில் அஜித்குமாரின் தம்பிகளில் ஒருவராகவும் பாலா நடித்திருந்தார். பாலாவும் கேரளாவை சேர்ந்த பிரபல பின்னணி பாடகி அம்ருதா சுரேஷூம் காதலித்து 2010- ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அவந்திகா என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் பாலாவுக்கும் அம்ருதாவுக்கும் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், கடந்த 2015 ஆம் ஆண்டு பிரிந்து தனித்தனியாக வசித்தனர்.

குடும்ப வாழ்க்கை
இதுகுறித்து செய்திகள் வெளியானபோது எங்கள் குடும்ப வாழ்க்கை குறித்து பேசவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தனர். பின்னர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கேட்டு நடிகர் பாலா வழக்கு தொடர்ந்தார். பின்னர் நீதிமன்றம் அவர்களுக்கு விவாகரத்து வழங்கி தீர்ப்பு வழங்கியது. மகள் அவந்திகா அம்மாவுடன் வளர்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

அழகான தவறுகள்
இவர்கள் விவாகரத்து, மலையாள சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே, பாடகி அம்ருதா சுரேஷ், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு தகவலை பதிந்திருந்தார். அதில், என் வாழ்க்கை சோதனைகளையும் அனுபவங்களையும் கொண்டது. அழகான தவறுகளை என் வாழ்க்கையில் செய்திருக்கிறேன். அந்த அழகான தவறுகளையும் வெற்றிக் கதைகளையும் கடந்து சென்றிருக்க வேண்டும்.

இரண்டாவது திருமணம்
இன்று மற்றொரு அழகான நாள். புதிய பரிசோதனையில் இறங்குகிறேன். உங்கள் அன்புக்கும் நம்பிக்கைக்கும் நன்றி. விரைவில் மற்ற விவரங்கள்..' என்று கூறியிருந்தார். இதையடுத்து, இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதைதான் அவர் இப்படி கூறியிருப்பதாகச் செய்திகள் வெளியாயின. இந்நிலையில் அதை மறுத்துள்ள அம்ருதா அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

சோர்ந்து விட்டேன்
அதில், இதுபோன்ற உண்மை இல்லாத செய்தியை கண்டு அப்செட் ஆகிவிட்டேன். என் இசை கேரியர் பற்றிய தகவலைதான் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்தேன். அதில் எனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நான் எதையும் குறிப்பிடவில்லை. தவறான செய்திகளை ஏன் இப்படி பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. இதற்கு முன்னும் இப்படி நடந்திருக்கின்றன. பலர் என்னிடம் இந்த விஷயம் பற்றி கேட்கிறார்கள். இதற்கு விளக்கம் சொல்லியே சோர்ந்துபோய்விட்டேன்' என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











