அய்யோ கடவுளே.. 32 வயசுதான் ஆகுது.. நடிகர் பால சரவணன் தங்கை கணவர் கொரோனாவுக்கு உயிரிழப்பு
சென்னை: நகைச்சுவை நடிகர் பால சரவணனின் தங்கையின் கணவர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 32.
டார்லிங், குட்டிப்புலி, ஈஸ்வரன் உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வருபவர் பால சரவணன்.
நமக்கெல்லாம் கொரோனா வராது என நினைப்பது கோழைத்தனம் என தனது ட்விட்டர் பக்கத்தில் பால சரவணன் பதிவிட்டுள்ளார்.

பால சரவணன்
விஜய் டிவியில் ஒளிபரப்பான கள்ளிக்காட்டுப் பள்ளிக் கூடம் தொடர் மூலம் அறிமுகமானவர் பால சரவணன். 2013ம் ஆண்டு வெளியான ஈகோ படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த அவர், அதே ஆண்டு வெளியான சசிகுமாரின் குட்டிப் புலி படத்தில் பப்புவாக நடித்து நகைச்சுவை நடிகராக பிரபலமானார். திருடன் போலீஸ், டார்லிங், வேதாளம், ஈஸ்வரன் மற்றும் களத்தில் சந்திப்போம் என ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கொரோனாவுக்கு பலி
கொரோனாவுக்கு நாள் தோறும் சினிமா பிரபலங்களும் அவர்களது உறவினர்களும் பலியாகி வரும் சோக செய்தி ஒலித்துக் கொண்டே இருக்கிறது. நடிகை பியா பாஜ்பாயின் அண்ணன், நிக்கி டம்போலியின் சகோதரர், இயக்குநர் கே.வி. ஆனந்த், பாடகர் கோமகன், நகைச்சுவை நடிகர் பாண்டு என பலரும் கொரோனாவுக்கு உயிரிழந்து வருகின்றனர்.

தங்கை கணவர் மரணம்
இந்நிலையில், நடிகர் பாலசரவணனின் தங்கையின் கணவர் கொரோனாவுக்கு உயிரிழந்த சோகமான செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் பால சரவணன். மேலும், வெறும் 32 வயது தான் அவருக்கு ஆகிறது என்பதையும் தெரிவித்துள்ளார். கொரோனா நமக்கெல்லாம் வராது என அலட்சியமாக இருக்க வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.

கோழைத்தனம்
"அன்பு நண்பர்களே...இன்று எனது தங்கையின் கணவர் கொரோணா காரணமாக இறந்துவிட்டார்...32வயது... தயவு கூர்ந்து மிக கவணமாக இருக்கவும்...நமக்கெல்லாம் வராது என்று நினைப்பது மாபெரும் கோழைத்தனம்...நம்மை பாதுகாக்க நம்மால் மட்டுமே முடியும்...முக கவசம் அணிவீ்ர்...plss" என மிகவும் உருக்கமாக பால சரவணன் பதிவிட்டுள்ள ட்வீட் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

பிரபலங்கள் ஆறுதல்
நடிகர் பால சரவணனின் தங்கை கணவர் கொரோனாவால் உயிரிழந்த செய்தியை அறிந்த சினிமா பிரபலங்களும் தமிழ் சினிமா ரசிகர்களும் நடிகர் பால சரவணனுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். கொரோனா பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்வது மிகவும் அவசியம்.


Click it and Unblock the Notifications











