மரணத்துடன் போராடிய நடிகர் பாலா.. இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?
கொச்சி : மரணத்துடன் போராடிய நடிகர் பாலாவுக்கு நல்லமுறையில் ஆப்ரேஷன் முடிந்துள்ள நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியான நடிகர் பாலா அன்பு என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அஜித்துடன் இவர் வீரம் படத்தில் தம்பிகளில் ஒருவராக நடித்திருந்தார் மலையாளத்தில் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகர் பாலா : இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரரான நடிகர் பாலா 2016ஆம் ஆண்டு பாடகி அம்ருதா சுரேஷை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒன்பது வயதில் மகன் இருக்கும் நிலையில், இருவரும் பிரிந்தனர். இதையடுத்து, 2021ம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த மருத்துவர் எலிசெபத் உதயன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
கல்லீரல் பாதிப்பு : அண்மையில் கல்லீரல் பாதிக்கப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலா, இன்னும் சில நாட்களில் எனக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. இதில் எனக்கு மரணம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது, பிழைக்கவும் வாய்ப்பு உள்ளது. உங்கள் அனைவரின் பிரார்த்தனையால் நிச்சயம் மீண்டு வருவேன் என்று உருக்கமுடன் பேசியிருந்தார். இவர் உடல் நலம் குணமடைய பலரும் பிரார்த்தனை செய்தனர்.
ஆப்ரேஷன் முடிந்தது : கல்லீரல் தானமாக கிடைத்ததை அடுத்து நடிகர் பாலாவுக்கு கடந்த வாரம் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. ஆப்ரேஷன் வெற்றிகரமாக முடிந்ததாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு இருந்தது. இந்த தகவலை கேட்டு அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

எப்படி இருக்கிறார் தெரியுமா : இந்நிலையில், நடிகர் பாலா கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் தனது முதல் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் தனது மனைவி எலிசபெத்துடன் சிரித்தபடி இருக்கிறார் பாலா. அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் பாலாவின் ரசிகர்கள், நலம் விரும்பிகள் புகைப்படத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்து, மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











