ஃபயர் படத்தில் செமயா வாழ்ந்து இருக்கேன்.. அந்த காட்சியில் நடிக்கும் போது.. பாலாஜி முருகதாஸ் பேட்டி!
சென்னை: பிக் பாஸ் பிரபலங்களான ரச்சிதா மகாலட்சுமி, பாலாஜி முருகதாஸ் நடித்திருக்கும் ஃபயர் திரைப்படம் பிப்ரவரி 14ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இதில், சாந்தினி தமிழரசன், சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான், சிங்கம்புலி மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிக்கையாளர்களுக்கான ஸ்பெஷல் ஷோ நேற்று சென்னையில் திரையிடப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பாலாஜி முருகதாஸ், அந்த பாடல் காட்சியில் நடித்தது குறித்து பேசி உள்ளார்.
இது ஒரு சிறந்த படம், நல்ல படம், படத்தில் நல்ல மெசேஜ் சொல்லி இருக்காங்க, நானும் இந்த படத்துல நல்லா நடிச்சிருக்கேன், நான் நடிச்சிருக்கேன் என்று சொல்வதை விட, பாலா செமயா வாழ்ந்து இருக்கிறார் என்று பலர் சொல்கிறார்கள். படத்தில் நடித்தது மட்டும் தான் நான், டைரக்டர் என்ன செய்ய சொன்னாரோ, அதை நான் செய்து இருக்கிறேன். ஜே.எஸ்.கே சார், இயக்கத்தில் நடிச்சது எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது, ரெண்டு மூணு படம் பண்ண பிறகு, என்ன அனுபவம் கிடைக்குமோ, அது இந்த படத்திலேயே எனக்கு கிடைத்து இருக்கிறது. அதற்கு காரணம், இந்த படத்துல ஒரு கல்யாண பாட்டு வரும், அந்த பாட்டை நாங்க ஒரே நைட்ல எடுத்து முடித்தோம். இதை சொன்னா யாரும் நம்ப மாட்டாங்க, ஆனால், அது தான் உண்மை. அந்த பாட்டு பண்ணும் போது எனக்கு கொஞ்சம் பதட்டமாக இருந்தது எந்த ஸ்டெப்பையும் மிஸ் பண்ணிடக் கூடாது என்று நினைத்தேன். அது நல்லபடியாகவே ஒரே நைட்டில் எடுத்து முடித்துவிட்டோம்.

அந்த மாதிரியான சீன்ல : இந்த படத்தில் நான் நடிச்சது ரொம்ப சேலஞ்சிங்காக இருந்தது. என்னோட கதாபாத்திரம் என்ன என்பதை, நீங்க பார்த்து இருப்பீங்க. அந்த மாதிரியான சீன்ல நான் நடிக்கும் போது, நம்மள சுத்தி பத்து முதல் 15 பேர் இருப்பார்கள், அவங்க சொல்றதுதான் நான் அந்த சீன்ல செய்யணும். அதே நேரத்தில் என் கூட நடிக்கிற நடிகையும் என் கூட கம்பர்ட்டா இருக்கணும், அதையும் தாண்டி இந்த காட்சியை ஆடியன்ஸ் ரசித்து பார்ப்பாங்களா? என பல எண்ணம் மனதிற்குள் வரும், அதுமட்டுமில்லாம இந்த காட்சியில் நடிப்பதற்கு தைரியம் வேண்டும். அப்பதான் அந்த காட்சி திரையில நல்லா வரும் நான் என்னுடைய ரெண்டாவது படத்திலேயே ஒரு சவாலான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கேன். இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த இயக்குனருக்கு நன்றி, என்னுடன் இணைந்து நடித்த அனைவருக்கும் என்று பாலாஜி முருகதாஸ் அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











