பாலாஜி முருகதாஸ் நடிக்கும்..மார்கண்டேயனும் மகளிர் கல்லூரியும்.. என்னப்பா இப்படி ஒரு டைட்டிலா?

சென்னை : பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தின் தலைப்பை ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளரான பாலாஜி முருகதாஸ், லிப்ரா நிறுவனத்தின் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிக்கும் திரைப்படம் இதுவாகும்.

இப்படத்தின் மற்ற நடிகர்கள், நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

பாலாஜி முருகதாஸ்

பாலாஜி முருகதாஸ்

கட்டுமஸ்தான உடல்வாகு... பார்த்தவுடன் வாவ் வாட் ஏ ஹேன்சம் பாய் என சொல்லக்கூடியவர் பாலாஜி முருகதாஸ். தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று மிகவும் பிரபலமானார். மாடலிங் துறையை சேர்ந்த பாலாஜி முருகன், பிக்பாஸ் சீசன் 4ன் காதல் மன்னன், பயில்வான், தைரியசாலி, என பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தார். பிக் பாஸ் சீசன் 4ல் தன்னை தானே செத்துக்கியவன் என்று பாடல் பாடாத குறைக்கு பறைசாற்றிக் கொண்டார்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

ஆரியுடன் சண்டையிட்டு மண்டையை முட்டிக்கொண்ட நேரத்திலும், ஷிவானியுடன் தனி ட்ராக்கை ஓட்டிக்கொண்டு இருந்தார் பாலாஜி. இந்த வீட்டில் ஷிவானியுடன் மிகவும் நெருங்கி பழகி வந்தனர். இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக ரசிகர்கள் கூறி வந்த நிலையில், ஷிவானியின் அம்மா பிக் பாஸ் வீட்டுக்குள் விசிட்டடித்து, பாலாஜிக்கு எடுபுடி வேலை செய்யத்தான் இங்கே வந்தியா? என ஷிவானியை கண்டமேனிக்கு திட்டித்தீர்த்துவிட்டு வெளியேறினார்.

அல்டிமேட்டில்

அல்டிமேட்டில்

என்னத்தான் பாலாஜி முருகதாஸ் மேல் பல்வேறு சர்ச்சைகளை எழுந்தாலும், தன்னுடைய ஹேன்சம் லுக்கால் ஏராளமான பெண் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருந்தார். ஏராளமான பெண்களின் ஆதரவால் பிக் பாஸ் வீட்டில் 105 நாட்கள் இருந்து 2வது இடத்தை பிடித்தார். இதையடுத்து, டிஸ்னி பிளாஸ் ஹாட் ஸ்டாரில் வெளியான பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னர் ஆனார்.

மார்கண்டேயனும் மகளிர் கல்லூரியும்

மார்கண்டேயனும் மகளிர் கல்லூரியும்

இந்நிலையில், ரவீந்தர் சந்திரசேகர் தயாரிப்பில் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக அறிமுகமாகும் படத்திற்கு மார்கண்டேயனும் மகளிர் கல்லூரியும் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை பாலாஜி முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 2007ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சாக்லேட் திரைப்படத்தின் ரீமேக்தான் இத்திரைப்படம்.

இப்படி ஒரு தலைப்பா

இப்படி ஒரு தலைப்பா

பாலாஜி முருகதாஸ் நடித்து வரும் படத்தின் தலைப்பை பார்த்த ரசிகர்கள் பலர் இதுதெல்லாம் ஒரு தலைப்பா என்றும் கிண்டலடித்து வருகின்றனர். படத்தின் கதை குறித்த தகவலோ அல்லது மற்ற கதாபாத்திரங்கள் குறித்த தகவல் எதுவம் இதுவரையில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X