twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாரதரத்னா கால் விரலுக்கு சமம்.. ஏஆர் ரஹ்மான் யாரென்றே எனக்கு தெரியாது.. பிரபல நடிகர் சர்ச்சை பேச்சு!

    |

    சென்னை: ஏஆர் ரஹ்மான் ஆஸ்கர் விருது வாங்கியிருக்கலாம் ஆனால் அவர் யார் என்றே எனக்கு தெரியாது என பிரபல தெலுங்கு நடிகர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நந்தமுரி பாலகிருஷ்ணா. 100க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

    அருள்நிதியின் தேஜாவு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்... வெளியிட்ட விஜய் சேதுபதி அருள்நிதியின் தேஜாவு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்... வெளியிட்ட விஜய் சேதுபதி

    நந்தி விருதுகள், சைமா விருதுகள், CineMAA விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை குவித்துள்ளார். 61 வயதான நந்தமுரி பாலகிருஷ்ணா தற்போதும் படங்களில் ஹீரோ ரோலில் நடித்து வருகிறார்.

    ஹிந்துபூர் எம்எல்ஏ

    ஹிந்துபூர் எம்எல்ஏ

    நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இயக்குநரகவும் வலம் வருகிறார் பாலகிருஷ்ணா. அரசியலிலும் ஆக்ட்டிவாக உள்ள பாலகிருஷ்ணா, தனது அப்பா தொடங்கிய தெலுங்கு தேசம் கட்சியில் ஆக்டிவாக உள்ளார். அதோடு ஆந்திர மாநிலம் ஹிந்துபூர் தொகுதியின் எம்எல்ஏவாகவும் உள்ளார் பாலகிருஷ்ணா.

    ரஹ்மானை அவமதித்து

    ரஹ்மானை அவமதித்து

    இந்நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பிரச்சனையில் சிக்கியுள்ளார் நடிகர் பாலகிருஷ்ணா. அதாவது தெலுங்கு டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள பாலகிருஷ்ணா, ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதையும் அவமதித்து பேசியுள்ளார்.

    கால் விரலுக்கு சமம்

    கால் விரலுக்கு சமம்

    ஏஆர் ரஹ்மான் என்பவர் ஆஸ்கர் விருது வாங்கியிருப்பதாக நான் கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் அவர் யார் என்றெ எனக்கு தெரியாது. பாரதரத்னா போன்ற விருதுகள் என் அப்பா என்.டி.ஆரின் கால் விரலுக்கு சமம். இந்த விருதுகள் என் காலடிக்கு சமம்.

    விருதுகள் வருத்தப்பட வேண்டும்

    விருதுகள் வருத்தப்பட வேண்டும்

    எந்தவொரு உயரிய விருதும் தன்னுடைய குடும்பம் தெலுங்கு திரையுலகிற்கு கொடுத்த பங்களிப்புக்கு ஈடாகாது. ஆகையால் இந்த விருதுகள் தான் வருத்தப்பட வேண்டுமே தவிர என் குடும்பமோ அல்லது என்னுடைய அப்பாவோ அல்ல என்று கூறியுள்ளார்.

    கேமரூன் போல் இல்லாமல்

    கேமரூன் போல் இல்லாமல்

    மேலும் தன்னை ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனுடன் ஒப்பிட்டு பேசிய பாலகிருஷ்ணா, ஜேம்ஸ் கேமரூன் போன்று இல்லாமல் படங்களை விரைந்து முடிக்க விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார்.

    என் வொர்க்கிங் ஸ்டைல்

    என் வொர்க்கிங் ஸ்டைல்

    அதிக திரைப்படங்களை உருவாக்குவதையும், குறைந்த நேரத்தில் அதிக வெற்றிகளைப் பெறுவதையும் நான் நம்புகிறேன். அதுவே எனது வொர்க்கிங் ஸ்டைல் என்றும் நடிகர் பாலகிருஷ்ணா கூறியுள்ளார்.

    நெட்டிசன்கள் கண்டனம்

    நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை அவமதித்தற்கும், ஆஸ்கர் விருது வென்ற ஏஆர் ரஹ்மானை இழிவு படுத்தி பேசியதற்கும் நடிகர் பாலகிருஷ்ணாவை நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ராஜமவுலி குறித்து தமிழ் நடிகர் ஒருவர் இழிவாக பேசினால் ஏற்று கொள்வார்களா என்றும் கேட்டு வருகின்றனர்.

    English summary
    Actor Balakirshna insults Bharatha Rathna Award and AR Rahman. He says in a TV interview,I also heard that someone called AR Rahman won an Oscar award. I don't even know who Rahman is. I feel Bharat Ratna is equal to NTR's toenail. So those awards must feel bad, not my family or my father."
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X