பாலகிருஷ்ணாவின் “அகண்டா“… மாஸ் வெற்றிக்கு பிரபலங்கள் வாழ்த்து !
ஆந்திரா : தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகி 'அகண்டா' திரைப்படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இப்படத்தில்,நந்தமுரி பாலகிருஷ்ணா, பிரக்யா ஜெய்ஸ்வால், ஜெகபதி பாபு‚ அவினாஷ் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை மிர்யாலா ரவீந்தர் ரெட்டி தயாரித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார்.

பாலகிருஷ்ணாவின்
லெஜண்ட் மற்றும் சிம்ஹாவுக்குப் பிறகு, இயக்குனர் போயபதி ஸ்ரீனு மற்றும் நடிகர் பாலகிருஷ்ணா ஆகியோர் மூன்றாவது இப்படத்தில் இணைந்துள்ளனர்.இப்படம் ஒரு மாஸ் மசாலா பொழுதுபோக்கு திரைப்படமாகும்.

மாஸ் திரைப்படம்
பாலகிருஷ்ணாவை சரியாகப் பயன்படுத்திய போயபதி, இரண்டு விதமான மாறுபாடுகளைக் காட்டியிருக்கிறார். முழுக்க முழுக்க மாஸ் திரைப்படமாக இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்களுக்குப் பெரிய விருந்தாக அமைந்துள்ளது. சராசரியான திரைக்கதை.இருப்பினும், பாலகிருஷ்ணா வித்தியாசமாக காட்சி அளிக்கிறார்.

இரட்டைவேடத்தில்
நடிகர் பால கிருஷ்ணா இத்திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். பிரக்யா ஜெய்ஸ்வால் ஐஏஎஸ் அதிகாரி கதாபாத்திரத்திலும், ஜெகபதி பாபு அகோரியாவும் நடித்துள்ளார். இன்று வெளியாகி உள்ள இத்திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ட்விட்டரில் வாழ்த்து
தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு, அகன்டா திரைப்படத்திற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார். அகன்டா திரைப்படம், மகத்தான தொடக்கத்தைப் பெற்றுள்ளது என்பதைக் கேட்பதில் மிகவும் மகிழ்ச்சி! நந்தமுரிபாலகிருஷ்ணா, போயபதி ஸ்ரீனு மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துகள். என கூறியுள்ளார்.

மாபெரும் வெற்றி
சுதீப் கிஷன் தனது ட்விட்டரில். அகண்டா பற்றி பயங்கரமான விஷயங்களைக் கேட்கிறேன். மீண்டும் மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்த பாலகிருஷ்ணா மற்றும் போயபதி ஸ்ரீனு அவர்களுக்கு வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











