Balakrishna: இன்னா குத்து குத்தறாரு.. நடிகையை பாடாய் படுத்திய பாலகிருஷ்ணா.. அடங்க மாட்டேங்கறாரே!

ஐதராபாத்: டோலிவுட்டின் முன்னணி நடிகராக பல ஆண்டுகளாக மாஸ் காட்டி வருபவர் பாலகிருஷ்ணா. 64 வயதான பாலகிருஷ்ணா நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் பாலகிருஷ்ணா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஊர்வசி ரவுத்தாலா, சாந்தினி சவுத்ரி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள டாகு மகாராஜ் படம் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது.

அதிரடி ஆக்ஷன் படமாக வெளியாகியுள்ளது டாகு மகாராஜ். இந்தப் படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. ராம்சரணின் கேம் சேஞ்சர் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில், ரசிகர்களின் நாடித்துடிப்பை சரியாக கணித்து இந்தப் படத்தில் தாபீடி திபிடி பாடலில் ஊர்வசி ரவுத்தாலாவுடன் இணைந்து ஆட்டம் போட்டுள்ளார் பாலகிருஷ்ணா.

balakrishna urvashi ravutala daaku maharaj movie

நடிகர் பாலகிருஷ்ணா: நடிகர் பாலகிருஷ்ணா தெலுங்கின் முன்னணி நடிகராக தொடர்ந்து பல ஆண்டுகளாக இருந்து வருகிறார். 64 வயதான நிலையிலும் அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், கடந்த ஆண்டில் பகவந்த் கேசரி என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், தற்போது பொங்கல் கொண்டாட்டமாக டாகு மகாராஜ் படம் நேற்றைய தினம் வெளியாகி மிகச்சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகிறது. கேம் சேஞ்சர் படத்திற்கு போட்டியாக இந்தப் படம் சிறப்பாக திரையரங்குகளில் வெற்றிக்கான ஓட்டத்தை மேற்கொண்டுள்ளது.

டாகு மகாராஜ் படம்: பாபி கொல்லி இயக்கத்தில் பாலகிருஷ்ணா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஊர்வசி ரவுத்தாலா, சாந்தினி சவுத்ரி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தப் படத்தில் பாலகிருஷ்ணா மற்றும் ஊர்வசி ரவுத்தாலா இணைந்து ஆட்டம் போட்டுள்ள தாபீடி திபிடி பாடல் மிகப்பெரிய விமர்சனங்களை ஏற்படுத்தியது. இந்தப் பாடலை விமர்சிக்கவென்றே ஒரு டீம் தனியாக செயல்பட்டதை பார்க்க முடிந்தது. ஆனாலும் இந்த வயதில் பாலகிருஷ்ணா ஊர்வசியுடன் சேர்ந்து இந்தப் பாடலில் போட்ட குத்தாட்டம் அனைத்து தரப்பினரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இந்தப் பாடல் படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.

குத்தாட்டம் போட்ட பாலகிருஷ்ணா: பாலகிருஷ்ணாவிற்கு முன்னால் ராம்சரண் நிற்க முடியாது என்ற விமர்சனங்களை இந்தப் படம் பெற்றுக் கொடுத்துள்ளது. இந்நிலையில் படத்தில் வெளியாகியுள்ள இந்த பாடலை மிஞ்சும் வகையில் பாலகிருஷ்ணா மற்றும் ஊர்வசி ரவுத்தாலா இருவரும் படத்திற்கான நிகழ்ச்சி ஒன்றில் இணைந்து இதே பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளனர். இந்தப் பாடலில் அவர் ஊர்வசியை இப்படியும் அப்படியுமாக ஆட்டுவிக்கிறார். ஒரு கட்டத்தில் அவர் குத்துவதாக காணப்பட்ட இடத்தை பார்த்து ஊர்வசி மட்டுமில்லாமல் ரசிகர்களும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினர். சூட்டிங்குன்னு நினைச்சிட்டாரா என்ற கமெண்ட்டும் தற்போது எழுந்துள்ளது.

வசூலில் மாஸ் காட்டும் படம்: டாகு மகாராஜ் படம் முதல் நாளிலேயே சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 22.5 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளது. தொடர்ந்து படம் மிகப்பெரிய வசூலை அள்ளும் என்று கணிக்கப்பட்டுள்ளது- நாளைய தினம் நடிகர் வெங்கடேஷின் சந்திராந்தகி வஸ்தனம் படமும் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் ரிலீசாகவுள்ள நிலையில், இந்தப் படங்களுடன் ராம்சரணின் கேம் சேஞ்சர் படம் தாக்கு பிடிக்குமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X