Manmadhan - படுக்கையறை சீனுக்காக முன்னாடியே தயார் ஆனேன்.. மன்மதன் பட நடிகர் ஓபன் டாக்

சென்னை: Manmadhan (மன்மதன்) மன்மதன் படத்தில் வரும் படுக்கையறை சீன் குறித்து அதில் நடித்த பாலகிருஷ்ணா பேசியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சிம்பு. சில பிரச்னைகளில் சிக்கியிருந்த அவர் அந்த பிரச்னைகளை முடித்து தனது உடல் எடையை குறைத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார். அப்படி அவர் நடித்த மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்கள் மெகா ஹிட்டாகி சிம்புவுக்கு பெயரை பெற்றுத் தந்தது. அதேபோல் பத்து தல படம் ப்ளாப் ஆனாலும் சிம்பு நன்றாக நடித்திருக்கிறார் என்று ரசிகர்கள் கூறினர்.

Actor Balakrishnan Talks about Manmadhan Bedroom Scene

எஸ்டிஆர் 48: சிம்பு தற்போது கமல் ஹாசன் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடித்துவருகிறார். இந்தப் படம் கண்டிப்பாக அவரது கரியரில் சிறந்த படமாக இருக்கும் என கருதப்படுகிறது. மேலும் இதற்காக அவர் பல விஷயங்களை கற்றுக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் சிம்பு ரசிகர்கள் பழைய சிம்புவை பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

மல்டி டேலண்ட்: சிம்பு வெறும் நடிகர் மட்டும் இல்லை இயக்குநர், பாடகர், பாடல் ஆசிரியர் என்பது அனைவருமே அறிந்தது. அவர் முதன்முதலாக இயக்கிய படம் என்றால் அது மன்மதன். ஜோதிகா, சிந்து துலானி உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. குறிப்பாக சிம்புவின் ஸ்க்ரீன் ப்ளேவை பலரும் பாராட்டினர். அதேசமயம் அந்தக் கதை வேறு ஒருவருடையது; இன்னொருவர்தான் படத்தை இயக்கவே செய்தார் என்ற சர்ச்சை எழுந்ததும் கவனிக்கத்தக்கது.

படுக்கையறை காட்சி: இந்நிலையில் அந்தப் படத்தில் சிந்து துலானியுடனான படுக்கையறை காட்சியில் நடித்த நடிகர் பாலகிருஷ்ணா தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அவர் அளித்த பேட்டியில், "மன்மதன் படத்தின் படப்பிடிப்பு 2006ஆம் ஆண்டு நடந்தது. அந்தத் திரைப்படம் வெளியான பிறகு நல்ல வரவேற்பு இருந்தது. அந்தத் திரைப்படம் நூறு நாட்கள்வரை ஓடியதும் குறிப்பிடத்தக்கது.

Actor Balakrishnan Talks about Manmadhan Bedroom Scene

கண்டுபிடிப்பார்கள்: மன்மதன் படம் வெளியான பிறகு நான் எங்காவது வெளியே சென்றால் மக்கள் என்னை கண்டுபிடித்துவிடுவார்கள். பள்ளி, கல்லூரிக்களுக்கு செல்லும்போது சீனு சீனு என்று அந்தக் கதாபாத்திர பெயரை சொல்லித்தான் அழைப்பார்கள். இந்தக் காலத்தில் அதன் தாக்கம் அதிகரித்திருக்கிறது. ஏனெனில் சோஷியல் மீடியா பெருகிவிட்டது. அந்தப் படத்தின் காட்சிகள் மீம்ஸ்களாகவும் வருகின்றனர்.

நடு இரவு: அந்த படுக்கையறை காட்சியை நடு இரவில்தான் நாங்கள் ஷூட் செய்தோம். அந்த சீனை எடுப்பதற்கு ரொம்ப கஷ்டப்பட்டோம். ஆனால் நல்லபடியாக எடுத்து முடித்ததால் அமைதியாக இருந்தோம். படுக்கையறை காட்சி இருப்பதாக என்னிடம் சொன்னார்கள். உடனே எனக்கு தயக்கம் இருந்தது என்று நான் சொல்லமாட்டேன். அதேசமயம் அந்த சீனுக்காக என்னை நான் தயார்ப்படுத்த வேண்டியிருந்தது. அதனையடுத்து அந்த சீனுக்காக நான் முன்னரே தயார்ப்படுத்திக்கொண்டேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X