Akhanda 2 Blue Sattai Maran Review: பாலைய்யாவின் அகண்டா 2 எப்படி இருக்கு.. ப்ளூசட்டை மாறன் விமர்சனம்
சென்னை: நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் இயக்குனர் போயபதி சீனு இயக்கத்தில் நேற்று அகண்டா 2 திரைப்படம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. படம் எப்படி உள்ளது என்று ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தை பார்க்கலாம்
படத்தினுடைய ஆரம்பத்தில் இந்திய எல்லையில் சீனா இந்தியாவிற்கு எதிராக சில சதி திட்டங்களை தீட்டுகிறது. அந்த சதி திட்டத்தில் நடக்கும் பேச்சு வார்த்தையில் செங்கிஸ்கான், அலெக்சாண்டரால் இந்தியாவை அழிக்க முடியவில்லை. ஏனென்றால் இந்தியா என்பது ஒரு ஆன்மீக பூமி, அங்குள்ள மக்கள் அனைவருக்கும் கடவுள் நம்பிக்கை அதிகமாக இருக்கிறது. அவர்களிடம் இருக்கும் கடவுள் நம்பிக்கையை சிதைத்து விட்டால், நாம் நினைத்தபடி இந்தியாவிற்குள் புகுந்து இந்தியாவை அழித்துவிடலாம் என திட்டம் போடுகின்றனர். பிளான் போட்டது மட்டுமில்லாமல், சீனா நினைத்தது போலவே இந்தியாவிற்குள் புகுந்து அனைவரையும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாக ஆக்கிவிடுகின்றனர். அதன் பிறகு என்ன நடந்தது என்பது தான் அகண்டா 2 திரைப்படத்தின் கதை.

அகண்டா 2: வழக்கமாக பாலைய்யா படத்தில் பஞ்ச் டயலாக்குகளும் மாஸான காட்சிகளும், பல லாஜிக் மீறல்களும் இருக்கும். ஆனால், இந்த திரைப்படத்தில் லாஜிக் மீறல்களை பற்றி பேச முடியாத அளவிற்கு பாலைய்யா ஒரு சூப்பர் பவர் கொண்டவராக இருப்பதால் லாஜிக் மீறல்கள் பற்றி பேச முடியவில்லை. பாலைய்யா திரைப்படங்களிலேயே இந்த படம் ஜீரோ லாஜிக் படம் என்று சொல்லலாம். அகண்டா முதல் பாகத்தில் படத்தின் கதை சுவாரசியமாக இருக்கும் அடுத்து என்ன, அடுத்து என்ன என்று யோசிக்க தோன்றும், அந்த திரைப்படத்தில் வரும் இரண்டு பாலைய்யா கதாபாத்திரங்களுக்கும் வலுவான கதாபாத்திரமாக இருக்கும். ஆனால் அகண்டா 2வில் இரண்டு கதாபாத்திரங்களில் ஒரு பாலைய்யா கதாபாத்திரத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: ஒரு படத்தில் கதை நன்றாக இருந்தால் திரைக்கதையில் கோட்டை விட்டுவிடுவார்கள். ஆனால், வசனத்தால் கோட்டை விட்ட திரைப்படம் என்று இந்த படத்தை சொல்லலாம். ஏனென்றால், கதைப்படி இந்திய மக்கள் அனைவரையும் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களாக சீனா மாற்றி விடுகிறது. கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையை கொண்டு வரும் பொறுப்பு படத்தின் கதாநாயகனாக பாலைய்யாவுக்கு இருக்கிறது. கடவுள் நம்பிக்கையை பாலைய்யா வசனத்தின் மூலமாக சொல்கிறார். கடவுள் எங்களுக்கு எதுவும் செய்யவில்லை, அவரை நாங்கள் ஏன் நம்ப வேண்டும் என கேட்க, அதற்கு கடவுள் இருக்கிறார் என்று ஆணித்தனமான ஒரு விஷயத்தை சொல்லாமல் மேம்போக்கு தனமாக வசனத்தை பேசி இருக்கிறார்.
பாலைய்யாவின் அட்டகாசம்: மொத்த சீன ராணுவமும் பீரங்கி குண்டுகளை வைத்து பாலைய்யா மீது தாக்குதல் நடத்துவார்கள். ஆனால், கையில் சூலாயுதத்தை வைத்து அதை தடுத்து விடுகிறார். அதுமட்டுமில்லாமல் சீனா சுவரை உடைத்துக் கொண்டு பீரங்கி மீது சூலாயுதத்துடன் வரும் காட்சி என பல காட்சிகள் பார்க்க குபீர் சிரிப்பை வர வைத்தன. அகண்டா முதல் பாகத்தை பார்த்தால், அடுத்து என்ன நடக்கும் என சுவாரசியத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். ஆனால், அகண்டா 2 எப்படா முடியும் என்று நினைக்கத் தோன்றுகிறதுரு என ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











