ஊரடங்கு இருக்கா… இல்லையா… யாராவது சொல்லுங்க ப்ளீஸ்… பாலசரவணன் ட்விட்!

சென்னை : நகைச்சுவை நடிகர் பாலசரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஊரடங்கு இருக்கா இல்லையா, யாராவது சொல்லுங்க என்று கேட்டுள்ளார்.

இவரின் இந்த பதிவுக்கு பலரும் பல கருத்துக்களை பதிவிட்டு இது தெரியாமத்தான் நாங்களும் மன உளைச்சல்ல இருக்கோம் என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இவர் தற்போது, பிளான் பண்ணி பண்ணுவோம், ஜாக், டான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்

டார்லிங் படத்தில்

டார்லிங் படத்தில்

விஜய் டிவியில் ஒளிபரப்பான கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம் என்ற நாடகத்தில் அறிமுகமானர். பின்னர். அதே தொலைக்காட்சியில், கனா காணும் காலங்கள் தொடரில் நடித்தார். அதன் பிறகு ஈகோ, குட்டிப்புலி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், டார்லிங், போன்ற படங்களின் மூலம் வேகமாக வளர்ந்து வருகிறார்.

16,665 தொற்று உறுதி

16,665 தொற்று உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஒரேநாளில் 16,665 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கடந்த 5 நாட்களில் மட்டும் 4 ஆயிரத்தை தொட்டுள்ளது.

4764 பேர் பாதிப்பு

4764 பேர் பாதிப்பு

சென்னையில் கொரோனா பாதிப்பு 4764 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகம் தவிர்த்து கர்நாடாகாவில் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

யாராவது சொல்லுங்க

யாராவது சொல்லுங்க

இந்நிலையில் நகைச்சுவை நடிகர் பாலசரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில், யாரைப் பார்த்தாலும் முழு ஊரடங்கு வரப்போகிறது. இல்ல அதுக்கலாம் வாய்ப்பேயில்லனு சொல்றாங்க.அத யோசிச்சே பல பேரு மன உளைச்சல்ல இருக்கிறது அவுங்க கிட்ட பேசும் போது தெரியுது. கேள்வி என்னனா முழு லாக்டவுன் வருமா வராதா? குறஞ்சபட்சம் இந்த பயத்துக்காவது பதில் சொல்லுங்க ஆபிஸர்ஸ் என்று குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X