இன்னும் எத்தனை உயிரை காவு வாங்குமோ … பிரபல காமெடி நடிகரின் தந்தை கொரோனாவால் மரணம் !
சென்னை : காமெடி நடிகர் பாலசரவணனின் தந்தை கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.
கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த மரணச்செய்தி திரை உலகினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அவரது மறைவுக்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

94,052 பேர் பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 94,052 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,148 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு நாளில் உயிரிழந்தவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும். 1,51,367 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

16,813 பாதிப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 16,813 பேராக உள்ளது. மேலும், 32 ஆயிரத்து 049 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 358 பேர் பலியாகி உள்ளனர். கொரோனாவின் தாக்கல் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் குறைந்திருந்தாலும் பலி எண்ணிக்கை குறையாதது வருத்தம் அளிப்பதாகவே உள்ளது.

உயிரிழந்தார்
இந்நிலையில் நகைச்சுவை நடிகரும், குணசித்திர நடிகருமான பாலசரவணனின் தந்தை எஸ்.ஏ. ரங்கநாதன் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

கொரோனாவால் உயிரிழந்தார்
இதேபோல பாலசரவணனின் சகோதரியின் கணவர் கொரோனாவால் கடந்த மாதம் உயிரிழ்ந்தார். இதை தனது ட்விட்டரில் பதிவிட்டு அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி கூறியிருந்தார் பாலசரவணன். இந்நிலையில், அவரது தந்தையும் கொரோனாவால் உயிரிழந்துள்ளது அனைவரையும் மனவேதனை அடையச் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











