என்னது ஜெயிலர் 2 படத்தில் அந்த நடிகரா?.. அப்போ அலப்பறை ஓவரா இருக்குமே பாஸ்
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. உலகளவில் அந்தப் படம் 700 கோடி ரூபாய்வரை வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க அந்தப் படத்தின் இரண்டாவது பாகமும் உருவாகவிருக்கிறது. அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில்தான் வீடியோவோடு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த, தர்பார் ஆகிய இரண்டு படங்களுமே வரிசையாக தோல்வியை சந்தித்தன. தோல்வி என்பதையும் தாண்டி கடுமையான ட்ரோலுக்கும்,மீம் கண்டெண்ட்டுக்கும் பயன்படுத்தப்பட்டன. இதனால் ரஜினியின் சகாப்தம் முடிந்துவிட்டது; அவர் சூப்பர் ஸ்டார் நாற்காலியை விட்டு இறங்கிவிட்டார் என்றெல்லாம் பேசினார்கள். எனவே ஒரு மெகா ஹிட்டை கொடுத்து அப்படி பேசியவர்களின் வாயை அடைத்துவிட வேண்டும் என்று அவரும் அவரது ரசிகர்களும் ரொம்பவே ஆர்வமாக காத்திருந்தார்கள்.

ஜெயிலர்: அப்படிப்பட்ட நிலைமையில்தான் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடிக்க கமிட்டானார் ரஜினிகாந்த். ஆனால் ஜெயிலர் படத்துக்கு முன்னதாக நெல்சன் இயக்கியிருந்த பீஸ்ட் படம் படுதோல்வியையும், கடுமையான ட்ரோலையும் சந்தித்திருந்தது. எனவே இவர் ரஜினியை வைத்து சம்பவம் செய்வாரா இல்லை வைத்து செய்வாரா என்ற அச்சம் ரசிகர்களிடம் ஆட்டோமேட்டிக்காக எழுந்தது. ஆனால் நெல்சன் மீது ரஜினிகாந்த் முழுக்க முழுக்க நம்பிக்கையை வைத்திருந்தார்.
மெகா ஹிட்: இந்தப் படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், தமன்னா, ஜாக்கி ஷெராஃப் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. படத்தில் ஒவ்வொரு சீனையும் நெல்சன் திலீப்குமார் பட்டை தீட்டியிருந்தார். அது ரஜினியின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கூஸ்பம்ப்ஸ் மொமண்ட்டுகளை ஏற்படுத்தியது. இதன் காரணமாக படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி உலகம் முழுவதும், 700 கோடி ரூபாய்வரை வசூல் செய்து சாதனை படைத்தது. தயாரிப்பு தரப்பிலிருந்து ரஜினி, நெல்சன், அனிருத்துக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
ஜெயிலர் 2: ஜெயிலர் படத்தின் முதல் பாகம் மெகா ஹிட்டானதைத் தொடர்ந்து அதன் இரண்டாவது பாகம் உருவாகும் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாமல் இருந்த சூழலில்; கடந்த பொங்கலுக்கு வீடியோவுடன் கூடிய அறிவிப்பு வெளியானது.அதில் ரஜினி படு மாஸாக இருந்தார். ஆனால் அந்த வீடியோவை டூப் வைத்து நெல்சன் உருவாக்கிவிட்டார் என்று பேச்சுக்கள் எழுந்தன. உடனே ப்ரோமோ வீடியோவின் மேக்கிங்கை வெளியிட்டு வாயடைத்தது படக்குழு.
புதிய தகவல்: படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படத்தில் சிவராஜ்குமார் நடித்த ரோலுக்கு பதிலாக பாலைய்யா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது புற்றுநோயால் சிகிச்சை பெற்றுவரும் சிவராஜ்குமார் தற்போது நடிப்பிலிருந்து ஓய்வு எடுத்திருக்கிறார். எனவே அவருக்கு பதிலாக பாலகிருஷ்ணாவை நடிக்க வைப்பதற்கு படக்குழு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











