சிறப்பாக முடிந்த நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணம்.. வாய்திறக்காம இருப்பாரா பயில்வான் ரங்கநாதன்?

சென்னை : இயக்குநர் விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் நேற்றைய தினம் சிறப்பான முறையில் நடந்து முடிந்துள்ளது.

Recommended Video

#NayantharaWedding கல்யாணம் எப்படி_ #BayilvanRanganathan _Shorts

திரையுலக பிரபலங்கள், உறவினர்கள், நண்பர்கள் சூழ இந்த திருமணம் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

திருமணம் முடிந்த கையோடு இன்றைய தினம் திருப்பதியில் இந்த நட்சத்திர ஜோடி சாமி தரிசனம் செய்துள்ளது.

விக்னேஷ் -நயன்தாரா திருமணம்

விக்னேஷ் -நயன்தாரா திருமணம்

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து நேற்றைய தினம் திருமணம் செய்துள்ளனர். கடந்த சில வருடங்களாக இவர்களது திருமணம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிவந்த நிலையில், காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியான சில நாட்களிலேயே இவர்கள் திருமணம் குறித்த தகவல்கள் வெளியாகின.

ரெசார்ட்டில் திருமணம்

ரெசார்ட்டில் திருமணம்

தொடர்ந்து இந்த விஷயம் குறித்து விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா மௌனம் சாதித்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு இந்த திருமணத்தை உறுதிப்படுத்தினார் விக்னேஷ் சிவன். தொடர்ந்து நேற்றைய தினம் மகாபலிபுரத்தில் பிரபல ரெசார்ட்டில் இவர்கள் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

நெட்பிளிக்சில் ஒளிபரப்பு

நெட்பிளிக்சில் ஒளிபரப்பு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தாலி எடுத்துக் கொடுக்க நயன்தாரா கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்டினார். இந்த அழகான தருணங்கள் வீடியோவாக எடுக்கப்பட்டு, நெட்பிளிக்சில் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. நேரில் சென்று திருமணத்தை பார்க்க முடியாத ரசிகர்கள், இந்த வீடியோவிற்காக காத்திருக்கின்றனர்.

நாளை ரிசப்ஷன்

நாளை ரிசப்ஷன்

இந்நிலையில் நாளைய தினம் பத்திரிகை மற்றும் மீடியாவை சந்திக்கும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன், ரிஷப்ஷன் நடத்தவுள்ளனர். முன்னதாக இன்றைய தினம் திருமணம் முடிந்த கையோடு திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளது இந்த நட்சத்திர ஜோடி. இதன் வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.

கைப்பிடித்து நடந்த விக்னேஷ் சிவன்

கைப்பிடித்து நடந்த விக்னேஷ் சிவன்

மஞ்சள் நிறத்தில் அழகான சேலையுடன் வலம்வந்த நயன்தாராவிற்கு ஏராளமான லைக்ஸ்கள் குவிந்துள்ளன. விக்னேஷ் சிவனும் அவருக்கு ஈடுகொடுக்க தவறவில்லை. நயன்தாராவின் கையை இறுக்கமாக பிடித்தபடி அவர் நடந்து வந்தது அனைவரையும் கவர்ந்தது.

பயில்வான் ரங்கநாதன் கமெண்ட்

பயில்வான் ரங்கநாதன் கமெண்ட்

இந்நிலையில் பிரபலங்கள், பிரபல நிகழ்வுகளை தொடர்ந்து கமெண்ட் செய்துவரும் நடிகர் பயில்வான் ரங்கநாதன், நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணம் யானை மீது அம்பாரி ஊர்வலம் போல நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இவர்களது திருமண வீடியோ ஓடிடியில் வெளியாக 25 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை ஆகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X