இரண்டு மகள்களை நினைத்து நிம்மதி இழந்து தவிக்கும் ஷங்கர்… பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்!

சென்னை: இரண்டு மகள்களை நினைத்து பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் கண்ணீர் வடித்து வருவதாக பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர். தமிழ் சினிமாவை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்ற இயக்குநர்களில் முக்கியமானவர்.

ஜென்டில்மேன் தொடங்கி 2.0 வரை பிரமாண்ட படங்களை தமிழ் சினிமாவின் தன்னிகரில்லா இயக்குநராக இருக்கிறார் இயக்குநர் ஷங்கர். தற்போது இவர் இந்தியன் 2, ராம்சரணின் கேம் சேஞ்சர் ஆகிய இரண்டு படங்களை ஒரே நேரத்தில் இயக்கிவருகிறார்.

Actor Bayilvan Ranganathan gave shocking information about director Shankar

பயில்வான் ரங்கநாதன்: சினிமா பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன், இயக்குநர் ஷங்கர் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,பிரம்மாண்ட இயக்குநர் என்று பெயர் எடுத்த ஷங்கர் சொல்லும் பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு அதிகமாகத்தான் ஆகும். அவரிடம் கதை கேட்க முடியாது, எவ்வளவு பட்ஜெட் என்று கேட்க முடியாது, இந்த சீன் எப்போ எடுக்க போறீங்க என்று கேட்க முடியாது. அந்த அளவுக்கு ஒரு இமேஜை பில்டப் செய்து வைத்து இருக்கிறார் ஷங்கர்.

மூத்த மகள்: இயக்குநர் ஷங்கருக்கு இரண்டு மகள் மூத்த மகள் ஐஸ்வர்யா, இளைய மகள் அதிதி ஷங்கர். ஐஸ்வர்யாவிற்கு கிரிக்கெட் வீரர் ரோகித் என்பவரை திருமணம் செய்து வைத்தார். பணம் பணத்தோடத்தான் சேரும் என்பார்கள் அதே போல தன்னைவிட பணக்கார குடும்பத்தில் தனது மகளை திருமணம் செய்து கொடுத்தார். திருமணமான ஆறே மாதத்தில் இருவரும் பிரிந்துவிட்டனர். இவர்களின் விவாகரத்து வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது.

அப்பா பேச்சை மீறி: இரண்டாவது மகள் அதிதி ஷங்கர் டாக்டர் படித்து முடித்த பிறகு தான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று அடம்பிடித்து விருமன் படத்தில் நடித்தார். அந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து, சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் நடித்தார். இந்த படத்திற்கு ஒப்பந்தம் ஆனதே ஷங்கருக்கு தெரியாது. சினிமா வேண்டாம் என்று எவ்வளவு சொல்லியும் அப்பாவின் பேச்சை கேட்காமல் தானாகவே முடிவு எடுத்து வருகிறார் அதிதி.

Actor Bayilvan Ranganathan gave shocking information about director Shankar

நிம்மதி இழந்து தவிக்கும் ஷங்கர்: இரண்டு மகள்களை நினைத்து நிம்மதி இழந்து தவிக்கும் ஷங்கர் சினிமாவில் நாட்டமே இல்லாமல் இருக்கிறார். இதனால், இந்தியன் 2 திரைப்படமும், ராம் சரணின் படத்தின் வேலையும் தாமதமாகிக் கொண்டே செல்கிறது என்று பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் குறித்து பயில்வான் ரங்கநாதன் வீடியோவில் பேசி உள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் எதையாவது கொளுத்திப்போடுவதே பயில்வான் ரங்கநாதனின் வேலை என்று திட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X