Kanaga :தீராத மனநோய்.. எங்கே போனார் கனகா? பயில்வான் ரங்கநாதன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

சென்னை : 90களில் முன்னணி நடிகையாக இருந்த கனகா குறித்து பயில்வான் ரங்கநாதன் பல அதிர்ச்சியான தகவலை கூறியுள்ளார்.

கரகாட்டக்காரன் கனகா என்று அழைக்கப்படும் கனகா கடந்த 20 ஆண்டுகளாக திரையுலகை விட்டு விலகியே உள்ளார்.

காதல் தோல்வி, காரணமாக திருமணம் செய்து கொள்ளாமல் நடிகை கனகா வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

நடிகை தேவிகா : பிரபல நடிகையான கனகா, நடிகை தேவிகாவின் ஒரே மகள். புரட்சித்தலைவர் எம்ஜிஆருடன் ஒரே படத்தில் கதாநாயகியாக நடித்தார் தேவிகா. அதன் பிறகு சிவாஜி கணேசனுடன் பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். நாடகத்தில் நடித்தன் மூலம் நடிகை தேவிகாவிற்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

கணவரை பிரிந்தார் : தேவிகா நடித்துக் கொண்டு இருக்கும் போதே,உதவி இயக்குநர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். தேவிகாவின் கணவருக்கு படத்தை இயக்க வேண்டும், தயாரிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததால், ஒரு படத்தை இயக்கினார். ஆனால், அந்த படம் ஓடாததால் பெரும் கஷ்டம் ஏற்பட்டு, தேவிகாவிற்கும் அவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தார்கள்.

Actor Bayilvan Ranganathan has revealed many shocking information about actress Kanaka

கரகாட்டக்காரன் : இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தாலும்,தேவிகாவின் கணவர் அவ்வப்போது வீட்டிற்கு வந்து மகள் கனகாவை பார்த்து வந்துள்ளார். மேலும், மகள் கனகாவும் தன்னை போல கதாநாயகியாக வேண்டும் என்று ஆசைப்பட்ட தேவிகா, கங்கை அமரன் இயக்கத்தில் உருவான கரகாட்டக்காரன் படத்தில் நடிக்க சம்மதித்தார். கனகா நடித்த முதல் படமே வசூலை அள்ளி வெள்ளிவிழா கண்டது.

கமலுடன் நடிக்கவில்லை : முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரபு, ரஜினிகாந்த், கார்த்திக்குடன் நடித்த கனகா, கமலஹாசனுடன் மட்டும் நடிக்கவே இல்லை. பாலச்சந்தர் கமலஹாசனுக்கு ஒருபடத்தில் ஜோடியாக நடிக்க அழைத்தபோது கனகா அதை மறுத்துவிட்டார். ஏன் என்றால் கமல் படத்தில் முத்தக்காட்சி இருக்கும் என்பதால் அவருடன் ஜோடியாக நடிக்க கனகா விரும்பவில்லை.

யார் அந்த காதலன் : இந்த நேரத்தில் தேவிகா இறந்துவிட, தனிமையில் இருந்த கனகா ஒருவரை காதலித்து அவருடன் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்ததாகவும், திடீரென அவர் எங்கோ சென்றுவிட்டார். அவரை தேடிவருவதாகவும் பேட்டி ஒன்றில் கனகா கூறியிருந்தார். யார் அவர், அவருடைய புகைப்படம் இருக்கிறதா என பத்திரிக்கையாளர்கள் பல கேள்விகளை கேட்டனர். ஆனால், எந்த கேள்விக்கும் கனகா பதில் அளிக்கவில்லை.

Actor Bayilvan Ranganathan has revealed many shocking information about actress Kanaka

கனகாவுக்கு என்னாச்சு : இதனால், மனதளவில் பாதிக்கப்பட்ட கனகா, தேனாம்பேட்டை வீட்டில் ஒரு பெண் உதவியாளருடன் தனியாக இருக்கிறார். வீட்டை விட்டுவெளியே வரமாட்டார் யாரிடமும் பேச மாட்டார். அண்மையில் அவரது வீட்டில் தீவிபத்து ஏற்பட்டபோது கூட, தீயணைப்பு வீரர்களை, கனகா உள்ளே அனுமதிக்கவில்லை. அவர்கள் தீயை அணைக்க முன்வந்த போது கனகா அவர்களிடம் சண்டை போட்டுள்ளார். இதனால் கனகா கிட்டத்தட்ட மனநோயாளியாகவே மாறிவிட்டாரா? என்ன ஆச்சு கனகாவுக்கு என்பது ஒரு மர்மமாகவே உள்ளது என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X