லியோ பட விவகாரம்.. ரஜினி மீது அவதூறு.. பயில்வான் ரங்கநாதன் சொல்வது என்ன?

சென்னை: லியோ படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடைத்திருப்பதால், ரஜினி வருத்தத்தில் இருப்பதாக இணையத்தில் வெளியான செய்தியை பயில்வான் ரங்கநாதன் திட்டவட்டவமாக மறுத்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள லியோ படம், வருகிற 19ந் தேதி வெளியாக உள்ளது.

Actor bayilvan Ranganathan has said that Rajinikanth is being defamed in the Leo film issue

இப்படத்தில், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தளபதியின் லியோ: லலித் தயாரித்துள்ள இப்படம் பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவுள்ளது. மேலும் படத்தில் பயங்கரமான வன்முறை காட்சிகள் இருப்பதால், 15 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் தான் இப்படத்தை தியேட்டரில் பார்க்க முடியும் என்று செய்தி வெளியாகி உள்ளது.

சிறப்பு காட்சிகள்: தமிழக அரசு லியோ படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கியது. அதன்படி 19 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை அதிகபட்சம் 1 நாளுக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டி பல்வேறு திரையரங்குகளில் முன்பதிவு டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. இதையடுத்து சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு, முதல் காட்சி காலை 9 மணி முதல் தொடங்கி கடைசி காட்சியை நள்ளிரவு 1.30 மணிக்குள் முடிக்கவேண்டும் என கட்டுப்பாடு விதித்துள்ளது.

புலம்பினாரா ரஜினி: லியோ படத்திற்கு மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்துள்ளதால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடுப்பாகி, ஜெயிலர் பட தயாரிப்பாளர் கலாநிதி மாறனுக்கு போன் போட்டு புலம்பி தள்ளி. ஜெயிலருக்கும் அதிகாலை காட்சி குறித்து நீங்கள் கூடுதல் முயற்சி செய்திருக்கலாமே என்று வருத்தப்பட்டதாக செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.

ரஜினி மீது அவதூறு: இதுகுறித்து, பேசி உள்ள பயில்வான் ரங்கநாதன், ரஜினி கலாநிதிக்கு போன் செய்து வருத்தப்பட்டதாக வரும் செய்தி முற்றிலும் பொய்யான செய்தி, ரஜினி ஒரு காலத்திலும் இதுபோன்று செய்யவே மாட்டார். ரஜினிக்கு படத்தில் நடித்து கொடுப்பது தான் வேலை, எத்தனை தியேட்டரில் ரிலீஸ் செய்கிறார்கள், எந்த தேதியில் ரிலீஸ் செய்கிறார்கள் என்பதை ரஜினி கவனிப்பதே இல்லை. இதனால் தேவையில்லாமல் சிலர் ரஜினி மீது அவதூறு பரப்பும் வகையில் செய்தி வெளியிட்டு வருகிறார்கள் இது கண்டிக்கத்தக்கது என்று பயில்வான் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X