மாயா மட்டுமில்ல.. தமிழ் சினிமாவில் நிறைய லெஸ்பியன் இருக்காங்க.. பயில்வான் சொன்ன ஷாக் நியூஸ்!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருக்கும் மாயா மட்டுமில்லை, தமிழ் சினிமாவில் நிறைய லெஸ்பியன்கள் இருக்கிறார்கள் என்று பயில்வான் ரங்கநாதன் அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் 7 ஆவது சீசன் ஆரம்பித்த நாளில் இருந்தே சண்டைகளுக்கு பஞ்சமே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

இந்த வீட்டில் மாயா ஒரு டீமை அமைத்துக்கொண்டு தனக்கு தகுந்த படி காய்களை நகர்த்தி வருகிறார்.
பிக் பாஸ் சீசன் 7: பிக் பாஸ் வீட்டில் மாயா மற்றும் பூர்ணிமாவுடன் நெருங்கி பழகி வருகிறார். அவருக்கு பூர்ணிமா மீது ஒரு க்ரஷ் இருக்கிறது இருவரும் பழகுவதை பார்க்கும் போது அது நன்றாக தெரிகிறது. இந்த இடத்தில் நான் லெஸ்பியன் தான் என்பதை அவர் தைரியமாக சொல்லி இருக்க வேண்டும் என்று திருநங்கை வைஷூ பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இதை கருத்தை பாடகி சுசித்ராவும் தெரிவித்து இருந்தார்.
தரம் தாழ்ந்துவிட்டது: இணையத்தில் பூதாகரமாகி வரும் இந்த விஷயம் குறித்து பேட்டி அளித்துள்ள பயில்வான் ரங்கநாதன், இந்த பிக் பாஸ் சீசன் ரொம்ப தரம் குறைந்துவிட்டதாக எனக்கு தெரிகிறது. முன்பு எல்லாம் வெளிப்படையாக மக்கள் வாக்களிப்பார்கள். ஆனால், இப்போது அது வெளிப்படையாக நடைபெறவில்லை. மேலும், பிக் பாஸ் மேலிடம் என்ன சொல்கிறதோ அதை செயல்படுத்த வேண்டிய ஒரு கருவியாக கமல் இருக்கிறார்.
லெஸ்பியன் தான்: மாயா லெஸ்பியன் தான் என்று இரண்டு, மூன்று நடிகைகள் என்னிடம் சொல்லி இருக்கிறார்கள். இந்த முறை திருநங்கை பிக் பாஸ் வீட்டிற்கு செல்லாததால், இந்த முறை ஓரின சேர்க்கையாளராக மாயா உள்ளே சென்றுள்ளார். அவர் தேர்வு செய்யப்பட்டதே இதற்காகத்தான். மாயாவின் நடவடிக்கை, பழக்க வழக்கம் எல்லாமே அப்படித்தான் இருக்கும். அவர்களுக்கு ஆண்களை பிடிக்கவே பிடிக்காது.
சினிமாவில் நிறைய பேர்: மாயா மட்டுமில்லை சினிமாவிலும் லெஸ்பியன்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் இது வெளியில் தெரிந்தால் அசிங்கம் என்று வெளியில் தெரியாமல் மறைத்து வருகின்றனர். அவர்கள் யார் என்று என்னால் வெளிப்படையாக சொல்ல முடியாது, அது அவர்களின் பர்சனல் என்று பயில்வான் ரங்கநாதன் பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











