Bayilvan Ranganathan: கமல்ஹாசன் மட்டும் அங்க பிறந்திருந்தா.. பயில்வான் ரங்கநாதன் சொன்ன விஷயம்!
சென்னை: நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் இன்றைய தினம் சர்வதேச அளவில் ரிலீசாகியுள்ளது. ஷங்கர் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த படத்தில் கமல்ஹாசன் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சில கலவையான விமர்சனங்களையும் இந்த படம் பெற்று வருகிறது. இந்நிலையில் பிரபல விமர்சகரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனின் நடிப்பு குறித்து பேசியுள்ளார்.
வழக்கமாக சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசிவரும் பயில்வான் ரங்கநாதன் தற்போது கமல் குறித்து பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனின் கெட்டப் குறித்தும் அவர் பேசியுள்ளார். மேலும் இந்தியன் 2 படத்தின் ஆக்ஷன் உள்ளிட்டவை குறித்தும் பயில்வான் ரங்கநாதன் இந்த வீடியோவில் பேசியுள்ளதை பார்க்க முடிகிறது.

நடிகர் கமல்ஹாசன்: நடிகர் கமல்ஹாசன் சிறுவயதில் இருந்தே திரைப்படங்களில் நடித்து வருகிறார்/ களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் துவங்கிய கமல்ஹாசனின் பயணம் தற்போது இந்தியன் 2 படத்தில் நிலை கொண்டுள்ளது/ தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் கமல்ஹாசன்/ 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் இன்றைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி வரவேற்பை பெற்று வருகிறது. இயக்குநர் ஷங்கருடன் 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படத்தில் நடித்துள்ளார் கமல்ஹாசன்.
இந்தியன் 2 பட ரிலீஸ்: இந்த படத்தின் அடுத்த பாகம் இன்னும் 6 மாதங்களில் வெளியாகும் என்று இந்த படத்தின் பிரமோஷனின்போது பேசிய இயக்குனர் ஷங்கர் கூறியிருந்தார். இதனிடையே அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன் அடுத்ததாக அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்கத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார். 70 வயதை கடந்த நிலையிலும் சிறிதும் நிற்காமல் இவரது திரைப்பயணம் தொடர்ந்து வருகிறது. தான் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு விஷயத்தையும் மிகுந்த மெனக்கடலுடன் கவனமாக மேற்கொள்வது கமல்ஹாசனின் சிறப்பான பக்கமாக பார்க்கப்படுகிறது.
பயில்வான் ரங்கநாதன் பாராட்டு: இன்றைய தினம் இந்தியன் 2 படம் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது. படத்தை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை புரிந்து வருகிறது. இந்நிலையில் இன்றைய தினம் நடிகரும் விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் கமல் குறித்து பாராட்டு தெரிவித்துள்ளார். வீடியோ மூலம் பேசியுள்ள பயில்வான் ரங்கநாதன், கமல்ஹாசன் ஹாலிவுட்டில் பிறந்திருந்தால் அவரை ஹாலிவுட் திரையுலகம் கொண்டாடியிருக்கும் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். அவருக்கு எந்தவிதமான ஒப்பனையும் மிகச்சிறப்பாக பொருந்துவதாகவும் கூறியுள்ளார்.
கமலுக்கு ஈடு இணையே கிடையாது: இந்தியன் 2 படம் குறித்து பாராட்டியுள்ள பயில்வான் ரங்கநாதன், தன்னுடைய ஒப்பனைக்கு ஏற்க சிறப்பான கெட்டப்புகளை கமல்ஹாசன் போட்டு வருவதாக தெரிவித்துள்ளார். வயதான நபர், விஞ்ஞானி என அடுத்தடுத்த கெட்டப்புகளில் பிரமாதப்படுத்தியுள்ளதாகவும் அவருக்கு ஈடு இணையே கிடையாது என்றும் பாராட்டியுள்ளார். வர்மக்கலையை பயன்படுத்துவது அவ்வளவு நேச்சுரலாக உள்ளதாகவும் தெரிவித்துள்ள பயில்வான் ரங்கநாதன், படத்தில் ஸ்டண்ட் அமைத்துள்ள சில்வா உள்ளிட்ட மாஸ்டர்கள் பிரமாதப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். படத்தில் சண்டைக்காட்சிகள் வேறு ரகத்தில் உள்ளதாகவும் பாராட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











