Bayilvan Ranganathan: பப்லு -ஷீத்தல் பிரிவுக்கு காரணமான நபர்.. பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட செய்தி!

சென்னை: நடிகர் பப்லு தன்னுடைய 5 வயது முதல் நடித்து வருகிறார். எம்ஜிஆர் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

தான் ஏற்கும் கேரக்டர்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் சிறப்பான திறமை பப்லுவிற்கு உண்டு. நடிகர் கமல்ஹாசன் போன்ற திறமை கொண்டவர் என்ற பாராட்டுக்கு உரியவர் பப்லு.

Actor Bayilvan Ranganathan opens up about Actor Babloo -Sheethal divorce

தன்னுடைய முதல் மனைவியுடன் விவாகரத்தான நிலையில் மறுமணம் செய்துக் கொள்ளாமல் வாழ்ந்து வந்தார் பப்லு.

நடிகர் பப்லு: நடிகர் பப்லு, தன்னுடைய 5வது வயது முதல் சினிமாவில் நடித்து வருகிறார். நாளை நமதே படத்தில் சிறுவயது எம்ஜிஆராக நடித்து புகழ் பெற்றவர். இவரது தந்தை உதவி கமிஷனராக இருந்த நிலையில், சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு பப்லுவிற்கு சிறுவயதிலேயே கிடைத்தது. அவரது சூட்டிகையான நடவடிக்கையாலும் இது சாத்தியமானது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த பப்லு சிறந்த நடிகர் என்ற பாராட்டுக்களை தொடர்ந்து பெற்றுவந்தார்.

சிறப்பான விமர்சனங்கள்: எம்ஜிஆருடன் மட்டுமில்லாமல் அஜித் உள்ளிட்டவர்களுடனும் பல்வேறு கேரக்டர்களில் நடித்துள்ளார் பப்லு. ஹீரோ, வில்லன், கேரக்டர் ரோல், காமெடியன் என தான் ஏற்கும் கேரக்டர்களுடன் பொருந்தி சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளார் பப்லு. தொடர்ந்து சீரியல்களிலும் நடித்த இவர் பாலசந்தருக்கு விருப்பமான நடிகர்களில் ஒருவர் என்ற பெயரையும் பெற்றவர். தன்னுடைய முதல் மனைவியுடன் விவாகரத்து பெற்று தன்னுடைய மகனுக்காக வாழ்ந்து வந்தார் பப்லு.

ஷீத்தலுடன் லிவிங் டுகெதரில் பப்லு: இவரது மகன் ஸ்பெஷல் சைல்ட் என்ற காரணத்தாலும் பப்லுவின் கோபமான கேரக்டராலும் இவரது முதல் மனைவி விவாகரத்து பெற்று பிரிந்தார். தொடர்ந்து தன்னுடைய மகனுக்காக யாரையும் திருமணம் செய்துக் கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். இதனிடையே சமீபத்தில் ஷீத்தல் என்ற இளம் வயது பெண்ணுடன் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வந்தார். இந்த விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது. தொடர்ந்து அவருடன் இணைந்து சமூக வலைதளங்களில் அதிகமான வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார் பப்லு.

பப்லு -ஷீத்தல் பிரிவு: இந்நிலையில் தற்போது இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக இருவரும் தனித்தனியாக அறிவித்துள்ளனர். 51 வயதான பப்லு 21 வயதான ஷீத்தலுடன் இணைந்தது விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில் தற்போது இவர்களின் பிரிவும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 7 மாதங்களாக இவர்கள் இருவரும் இணைந்து வாழ்ந்துவந்த நிலையில் வரும் ஜனவரி மாதத்தில் இருவரும் திருமணம் செய்யவும் நினைத்திருந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் தற்போது பிரிந்துள்ளனர்.

பப்லு -ஷீத்தல் விவகாரம் குறித்து பயில்வான் ரங்கநாதன்: இந்நிலையில் இவர்கள் இருவரின் பிரிவு குறித்து நடிகர் பயில்வான் யூடியூப் பக்கத்தில் பேசியுள்ளார். இவர்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்ததாகவும் தற்போது சந்தோஷமாக பிரிந்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார். திருமணம் செய்துக் கொள்ளாமல் ஒரு பைண்டிங் இல்லாமல் இருவரும் இருந்ததுதான் இவர்களின் பிரிவுக்கும் காரணமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு கலாச்சாரமான இந்த லிவிங் டுகெதர் வாழ்க்கை தற்போது தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X