அப்பாவை பிரிந்தாரா சூர்யா.. மும்பையில் குடியேறினாரா? பயில்வான் ரங்கநாதன் சொன்ன ஷாக் நியூஸ்!
சென்னை : நடிகர் சூர்யா, அப்பா சிவக்குமாரை விட்டு பிரிந்து மும்பையில் குடியேறி உள்ளதாக அதிர்ச்சியான தகவலை பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளாக சூர்யா மற்றும் ஜோதிகா உள்ளனர். முன்னணி நடிகர்களாக வலம் வரும் இவர்கள் கடந்த 2006ஆம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள்.

நடிகை ஜோதிகா
திருமணம் ஆன புதிதில் சினிமாவில் நடிக்காமல் விலகி இருந்த ஜோதிகா 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். , இந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து, தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

சிவகுமார் போட்ட கண்டிஷன்
இந்நிலையில், நடிகர் சூர்யா, அப்பா சிவக்குமாரை விட்டு பிரிந்து மும்பையில் குடியேறி உள்ளதாக அதிர்ச்சியான தகவலை பயில்வான் ரங்கநாதன் தனது யூடியூப் சேனல் ஒன்றில் கூறியுள்ளார். அதில், சூர்யா ஜோதிகா திருமணத்திற்கு சம்மதித்த சிவகுமார், நான் போதுமான அளவு சம்பாதித்து வைத்து இருக்கிறேன், சூர்யாவும் சம்பாதித்து வைத்து இருக்கிறார். இதனால், ஜோதிகா திருமணத்திற்கு பிறகு படத்தில் நடிக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் திருமணத்திற்கு சம்மதித்தார்.

நடிக்க சம்மதித்தார்
திருமணம் ஆகி பல ஆண்டுகளுக்கு பின், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை என்பதாலும், ஹீரோ இல்லை, டூயட் இல்லை என்பதால் 36 வயதினிலே படத்தில் நடிக்க அனுமதித்தார். ஆனால், அண்மையில் மலையாளத்தில் மோகன்லாலுடன் ஒரு படத்தில் நடிக்க இருக்க இருப்பதாகவும், இந்தி படத்திலும் கமிட்டாகி இருக்கிறார்.

மும்பையில் குடியேறினார்
தற்போது, சூர்யா மும்பை விமான நிலைய பார்க்கிங்கை ஏலம் எடுத்தார். அந்த தொழில் லாபத்தை பெற்றுத்தந்ததால், மும்பையில் இன்னும் சில தொழில்களில் முதலீடு செய்துள்ளார். அது மட்டுமில்லாமல் மும்பையில் ஒரு வீட்டை வாங்கி, குழந்தைகளுடன் மும்பையில் குடியேறிவிட்டார் சூர்யா இது சிவக்குமாருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

இந்தியில் முத்திரைப்பதிக்க
இந்தியில் சூர்யாவை எப்படியாவது முதல் தர ஹீரோவாக ஆக்கிவிடவேண்டும் என்பதை ஜோதிகா லட்சியமாகவே வைத்து இருக்கிறார். ஜோதிகாவை காதலிக்கும் போதே சூர்யா இந்தி கற்றுக்கொண்டுவிட்டதால், அவருக்கு இந்தி ஒரு தடையாக இருக்காது எனவே தமிழில் முத்திரைப்பதித்த சூர்யா இந்தியிலும் முத்திரைப்பதிக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறார். இதற்கு முதற்கட்டமாகத்தான் மும்பையில் குடும்பத்துடன் செட்டிலாகி உள்ளார். தமிழ் பட ஷூட்டிங்கிற்கு வரும் போது சிவக்குமார் வீட்டில் தங்கிக் கொள்கிறார் என்று பயில்வான் ரங்கநாதன் ஒரு அதிர்ச்சியான தகவலை கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











