சினேகா விவாகரத்து உண்மையா? பயில்வான் ரங்கநாதன் சொல்வது என்ன?

சென்னை : நடிகை சினேகாவும் பிரசன்னாவும் விவாகரத்து செய்து கொள்ள இருப்பதாக பரவி வரும் செய்தி குறித்து பயில்வான் ரங்கநாதன் தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளார்.

தென்னிந்திய சினிமாவுலகில் முன்னணி நடிகையாக சினேகா. ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, புதுப்பேட்டை, வசீகரா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

சினேகா தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். மேலும், ஒரு சில படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

நடிகை சினேகா

நடிகை சினேகா

நடிகை சினேகா தனது அழகான சிரிப்பால் தமிழக ரசிகர்களை வளைத்துப்போட்டு புன்னகை அரசி என பெயர் எடுத்தார். விஜய், அஜித், கமல், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் என்று பல டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்து ரசிகர்கள் மனதில் பிடித்தார் சினேகா. தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வந்தார்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

2009 ஆம் ஆண்டு பிரசன்னா மற்றும் சினேகா இருவரும் அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு பின்னாளில் அது காதலாக மாறியது. இதையடுத்து 2011ம் ஆண்டு இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களுக்கு விகான் என்ற மகனும், ஆத்யந்தா என்ற மகளும் உள்ளனர்.

விவாகரத்து செய்துவிட்டார்கள்

விவாகரத்து செய்துவிட்டார்கள்

சினேகாவும் பிரசன்னாவும் விவாகரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாக இணையத்தில் ஒரு செய்தி காட்டுத்தீ போல பரவிய வரும் நிலையில், இந்த செய்தி குறித்து சினிமா விமர்சகரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தனது யூடியூப் சேனல் ஒன்றில் பேசி உள்ளார். அதில், சினேகாவும் பிரசன்னாவும் விவாகரத்து செய்ய இருப்பதாக பரவி வரும் செய்தியில் துளி கூட உண்மை இல்லை என்றார்.

பயில்வான் ரங்கநாதன் விளக்கம்

பயில்வான் ரங்கநாதன் விளக்கம்

இவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக பிரபல தொலைக்காட்சியில் செய்தி வெளியானதை அடுத்தே இந்த விவகாரம் பூதாகரமானது. அந்த பிரபல தொலைக்காட்சி நிறுவனம் சினேகாவிடம் ஒரு இன்டர்வியூ கேட்டதாகவும், பொங்கலுக்கு ஒரு நிகழ்ச்சியை தயாரித்து தரும்படி கேட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதுதான் காரணம்

இதுதான் காரணம்

இந்த நிகழ்ச்சிக்காக சினேகா சம்பளம் கேட்டுள்ளார். தொலைக்காட்சி நிர்வாகம் சம்பளத்தை குறைத்துக்கொள்ளும்படி பலமுறை கேட்டுள்ளனர். இதற்கு சினேகா சம்மதிக்காததால், சினேகா மீது இருந்த கடுப்பால் அந்த சேனல் விவாகரத்து வதந்தியை பரப்பி விட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு தனிப்பட்ட சுயநல காரணத்திற்காக சினேகா மீது அவதூறு பரப்பலாமா என சினேகாவின் ரசிகர்கள் பிரபல தொலைக்காட்சி மீது வெறுப்பில் இருக்கிறார்கள் என்று பயில்வான் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X