உசுப்பிவிட்டதே விஜய் ரசிகர்கள் தான்.. ஜெயிலர் பட வெற்றிக்கு காரணமே இதுதான்.. பிரபலம் சொன்ன தகவல்!

சென்னை: ஜெயிலர் படத்தை வெற்றிப்படமாக்கியதே விஜய் ரசிகர்கள் தான் என்று பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றில் கூறியுள்ளார்

ரஜினிகாந்த் நடித்து மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ள ஜெய்லர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது

Actor Bayilvan Ranganathan talks about Jailer film success

நெல்சனுக்கும் பீஸ்ட் படத்தால் வந்த மோசமான விமர்சனத்தை இந்த படத்தின் மூலம் நெல்சன் முறியடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படம் நான்கு நாட்களில் உலகம் முழுவதும் 250 முதல் 300 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உசுப்பிவிட்டதே விஜய் ரசிகர்கள்: சினிமா குறித்து பல விஷயங்களை பகிர்ந்து வரும் பயில்வான் ரங்கநாதன், ஜெயிலர் படம் குறித்து யூடியூபில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஜெயிலர் படத்தை உசுப்பிவிட்டதே விஜய் ரசிகர்கள் தான். சூப்பர் ஸ்டார் பட்டம் எங்களுக்குத் தான் என்று சொல்லி, ரஜினி வைத்திருந்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை பிடுங்குவதற்கு சதி செய்தார்கள்.

கொண்டாடும் ரசிகர்கள்: அந்த சதியை முறியடிக்க வீறு கொண்ட வேங்கை போல எழும்பினார்கள் ரஜினிகாந்த் ரசிகர்கள். யாரைப்பார்த்து என்ன கேள்வி கேட்ட, இரண்டு வருடம் ரஜினி படம் நடிக்கவில்லை என்றால் அவர் சூப்பர் ஸ்டார் இல்லையா, இப்போ பார் என் தலைவன் வந்து விட்டான் என்று ஜெயிலர் படத்தை திருவிழாப் போல கொண்டாடி வருகின்றனர்.

Actor Bayilvan Ranganathan talks about Jailer film success

திருவிழாப்போல: படம் வெளியான முதல் நாளில் இருந்து நான்கு நாட்களும் அனைத்து தியேட்டர்களிலும் கூட்டம் அலைமோதியது. திங்கட்கிழமையான இன்று மட்டும் தான் சில தியேட்டர்களில் சில சீட்கள் இருக்கின்றன. ஆனால், நாளைய தினம், விடுமுறை என்பதால், நாளைய தினமும் அனைத்து தியேட்டர்களிலும் முன்பதிவு முடிந்துவிட்டது. இப்படி முன்பதிவிலேயே ரஜினி ரசிகர்கள் தூள்படுத்திவிட்டார்கள். ஜெயிலர் படத்தை வெற்றிப்படமாக்கியதே விஜய் ரசிகர்கள் என்று பயில்வான் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.

மாஸ் பாடல்கள்: ஜெயிலர் படத்தில் ரஜினியைத் தவிர ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ் குமார், மிர்னா மேனன், தமன்னா, விநாயக், யோகிபாபு, ஜாக்கி ஷெராப், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையில் ஜெயிலரின் பிஜிஎம் மற்றும் பாடல்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X