twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இதுவும் அதுவும் ஒன்றல்ல என்பதை ஏற்க முடியாது: விசு மீது பாக்யராஜ் புகார்!

    |

    Recommended Video

    விசு சொல்வதை ஏற்கமுடியாது...பாக்கியராஜ் புகார்!- வீடியோ

    சென்னை: தென் இந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பாக்யராஜ் மாநகர காவல் ஆணையரை சந்தித்து விசு மீது புகார் அளித்துள்ளார்.

    நடிகரும் இயக்குனருமான கே.பாக்யராஜ் சமீபத்தில் தென் இந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் இயக்குனர் ஏ.வெங்கடேஷ், ரமேஷ்கண்ணா உள்ளிட்டோருடன் சென்று நடிகர் விசுவுக்கு எதிராக காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

    Actor Bhagyaraj files complaint against Visu!

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாக்யராஜ், தென் இந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க அறக்கட்டளை நலிந்தவர்களுக்கு உதவவும், கல்வி உதவித்தொகை வழங்கவும் உருவாக்கப்பட்டது என்றும் தற்போது அது எந்த நிலையில் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள சம்பந்தபட்டவர்களை தொடர்புகொண்டபோது அவரக்ளுடைய பதில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை எனத் தெரிவித்தார்.

    அறக்கட்டளையின் பொருப்பாளராக இருக்கும் விசுவுவை இதுதொடர்பாக பேச அழைத்தபோது போது, உடல்நலக்குறைவு காரணமாக சந்திக்க மறுத்து, செயலாளர் பிறைசூடனை சந்திக்கக் கூறியதாக தெரிவித்தார்.

    அறக்கட்டளை நிதியை கல்வி உதவித்தொகைக்கு பயன்படுத்துவது குறித்து கேட்டபோது, சங்கத்திற்கும், அறக்கட்டளைக்கும் தொடர்பு இல்லை என பிறைசூடன் கூறியதாக பாக்யராஜ் தெரிவித்தார்.

    அதன்பிறகு கலந்து ஆலோசித்த சங்க உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் சங்கத்திலிருந்து பணத்தை எடுத்து அறக்கட்டளை ஆரம்பித்துவிட்டு இரண்டுக்கும் தொடர்பு இல்லை என்று பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஒருமனதாக முடிவெடுத்தனர்.

    அதனையடுத்து இதுதொடர்பாக விசாரிக்கக் கோரி அறக்கட்டளை தலைவர் விசு, செயளாலர் பிறைசூடன் மற்றும் அரங்காவலர் மதுமிதா ஆகியோர் மீது சங்கத் தலைவர் பாக்யராஜ் தலைமையில் புகார் அளித்துள்ளனர்.

    Read more about: bhagyaraj visu விசு
    English summary
    South Indian film writer association head Actor Bhagyaraj has given a complaint against Visu, Piraisudan and Madhumitha along with his association members.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X