twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அடி பலமோ.. பழமொழி சொல்லவே பயமா இருக்கு.. மைக் முன்னாடி மிரண்ட பிரபல இயக்குநர்!

    |

    சென்னை: சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பழமொழி சொல்லவே பயமா இருக்கு என்று பேசியிருக்கிறார் இயக்குநர் பாக்கியராஜ்.

    17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கலைவாணர் அரங்கில் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது. வரும் 19ம் தேதி வரை நடக்கும் விழாவில், 55 நாடுகளை சேர்ந்த, 130 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

    இந்த விழாவிற்கு, தமிழக அரசு 75 லட்சம் ரூபாய் நிதி வழங்கியிருக்கிறது. இந்த விழாவில் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.

    ஆபாச படம் பார்த்தால் கைது.. ப்ளீஸ்.. இப்படியெல்லாம் போடாதீங்க.. நடிகையிடம் கெஞ்சும் நெட்டிசன்ஸ்!ஆபாச படம் பார்த்தால் கைது.. ப்ளீஸ்.. இப்படியெல்லாம் போடாதீங்க.. நடிகையிடம் கெஞ்சும் நெட்டிசன்ஸ்!

    திரைப்படத்துறைக்கு நிதி

    திரைப்படத்துறைக்கு நிதி

    இதில் பேசிய நடிகர் பாக்யராஜ், அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என பிரார்த்திக்கிறேன். திரைப்படத்துறைக்கு தமிழக அரசு அதிக நிதியுதவி வழங்கி வருகிறது.

    பழமொழி சொல்ல பயம்

    பழமொழி சொல்ல பயம்

    ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது' என சொல்லி சம்மன் வாங்கியதால் இப்போது பழமொழி சொல்லவே பயமாக இருக்கிறது என்றார். அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாக்யராஜ், பொள்ளாச்சி சம்பவத்திற்கு பெண்களும்தான காரணம் என்று கூறியது பெரும் சர்ச்சைய ஏற்படுத்தியது.

    ஊசி இடம் கொடுக்காமல்

    ஊசி இடம் கொடுக்காமல்

    ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது என்று பழமொழி சொல்லியும், ஒரு ஆண் மனைவி இருக்க இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டாலும், கணவன் அவளையும் நன்றாக பார்த்துக் கொள்வான்.ஆனால், பெண் கள்ள உறவில் இருந்தால், அவளின் கணவனை கொன்று விடுவாள் என்றார்.

    பெரும் சர்ச்சை

    பெரும் சர்ச்சை

    அதோடு பொள்ளாச்சி வழக்கில் பெண்கள் கட்டுப்பாடாக இருந்திருந்தால் இந்த தவறு நடந்து இருக்காது என்றும் கூறினார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அந்த பேச்சால்..

    அந்த பேச்சால்..

    நடிகர் பாக்கியராஜின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்தது. சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் பாக்யராஜை கைது செய்ய வேண்டும் தமிழ்நாடு பெண்கள் இயக்கம் கோரிக்கை விடுத்தது. இதனை கருத்தில்கொண்டே நடிகர் பாக்யராஜ் பழமொழி சொல்ல பயமாக உள்ளது என்று கூறியிருக்கிறார்.

    English summary
    Actor Bhakyaraj is afraid to say proverb in function. He remembers condemns for his speech mabout Pollachi issue.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X