த்ரிஷாவின் சென்னை வீட்டை வாங்கிய பிரபல நடிகர்.. யார் அந்த நடிகர் தெரியுமா?
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை த்ரிஷா. தனக்கு என தனி ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கும் த்ரிஷாவின் சென்னை வீட்டை பிரபல நடிகர் ஒருவர் பெரும் தொகை கொடுத்து வாங்கி உள்ளார்.
சிம்ரன் பிரசாந்த் நடித்த ஜோடி படத்தில் சிம்ரனின் கல்லூரி தோழியாக ஒரு சின்ன ரோலில் நடித்திருந்தார் நடிகை த்ரிஷா. அதன் பிறகு ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவான லேசா லேசா படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி நடித்து வந்தார். ஆனால், அந்தப் படம் வெளியாவதற்கு முன்பே அமீர் இயக்கிய மௌனம் பேசியதே படத்தில் சூர்யாவுடன் சேர்ந்து நடித்தார். முதல் படத்திலேயே திரிஷாவின் நடிப்பும், அழகும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. எக்பிரஸ் குயின் என வர்ணிக்கப்படும் த்ரிஷா, சாமி, கில்லி, மங்காத்தா, என அஜித், விஜய், ரஜினி, கமல், விக்ரம், சிம்பு, ஆர்யா,சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.

நடிகை த்ரிஷா: தமிழ் சினிமா மட்டுமில்லாமல், தெலுங்கு, கன்னடம் என பிஸியாக நடித்து வந்த த்ரிஷாவிற்கு திடீரென படவாய்ப்பு குறைந்ததை அடுத்து அவரை திரையில் பார்க்க முடியாமல் போனது. இதைத்தொடர்ந்து, மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில், குந்தவை என்கிற கதாபாத்திரத்தில் நடித்து கம்பேக் கொடுத்தார். இந்த படத்தின் முதல் இரண்டு பாகமுமே நல்ல வசூல் வேட்டை நடத்தியது.
அடுத்தடுத்த படத்தில்: இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யுடன் லியோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்திற்கு பின், டாப் கியரில் இருக்கும் த்ரிஷா, அஜித்துடன் விடாமுயற்சி படத்திலும், மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைஃப் படத்திலும், அவர் இணைந்திருப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது. ஒருபக்கம் பெரிய ஹீரோக்களுடன் ஜோடி போடும் அவர், மறுபக்கம் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில், த்ரிஷா கடைசியாக பிருந்தா என்ற வெப் சீரிஸில் நடித்தார்.
கோட் படத்தில்: அதுமட்டுமில்லாமல் தளபதி விஜய் நடித்த கோட் படத்தில் மட்ட பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார். இரண்டாவது இன்னிங்சை தொடங்கி இருக்கும் த்ரிஷா, அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். கோட் படத்திற்கு விஜய்க்கு 200 கோடி சம்பளம் கொடுக்கப்பட்ட நிலையில், ஒரே பாடலுக்கு நடனமாடியதற்காக நடிகை த்ரிஷாவிற்கு ரூ80 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது
நடிகர் பானு சந்தர்: பிஸியான நடிகையாக இருக்கும் த்ரிஷா சென்னை மற்றும் ஹைதராபாத்தில் ஆடம்பரமான பங்களாவை வைத்திருக்கிறார்.இதில், சென்னையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கிருஷ்ணாபாய் தெருவில் இருக்கும் வீட்டை அண்மையில் ஒரு பிரபல நடிகருக்கு விற்றுள்ளார். நடிகர், இயக்குநர் , தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்ட பானு சந்தருக்கு விற்றுள்ளார்.தெலுங்கு நடிகரான பானு சந்தர் தமிழில் மூடுபனி, நீங்கள் கேட்டவை, வீடு, விசில், மச்சி, திமிரு என பல திரைப்படத்தில் நடித்துள்ளார். குறிப்பாக இவர் நடித்த நீங்கள் கேட்டவை படத்தில் வரும் ஓ.... வசந்த ராஜா என்ற சூப்பர் ஹிட் பாடலில் பானு சந்தர் இடம் பெற்று இருப்பார்.


Click it and Unblock the Notifications











