Kaalidas 2 Box Office: பரத்தை ஏமாற்றிய காளிதாஸ் 2.. இதுவரை 5 நாட்களில் இவ்வளவு தான் வசூல் செய்ததா?

சென்னை: தமிழ் சினிமா ஒவ்வொரு மாதமும் ஒரு படம் வெற்றிப் பெற்றாலே பெரிய விஷயம் என்கிற சந்தோஷத்தில் இருப்பதாகத்தான் தெரிகிறது. ஆனால், ஃப்ளாப் ஆகும் பல படங்களின் வலியும் வேதனையும் அந்த அந்த படக்குழுவுக்கும் தயாரிப்பாளருக்குமே தெரியும்.

கோலிவுட்டில் இந்த ஏப்ரல் இதுவரை எந்தவொரு படமும் பாக்ஸ் ஆபீஸ் கல்லாவை நிரப்பவில்லை என்றே பாக்ஸ் ஆபீஸ் டிராக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Actor Bharath again faces big flop Kaalidas 2 Movie Day 5 Box Office Reports are here

கடந்த வாரம் வெளியான நீளிரா, காளிதாஸ் 2, கார்மேனி செல்வம் உள்ளிட்ட படங்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய பின்னடைவையே சந்தித்துள்ளன. கென் கருணாஸின் யூத், ஜி.வி. பிரகாஷ் குமாரின் ஹாப்பி ராஜ் உள்ளிட்ட படங்களின் வசூலும் டிராப் ஆகத் தொடங்கியுள்ளன.

விரக்தியில் பரத்: ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் பரத். அந்த படத்திற்கு பிறகு விஷாலின் செல்லமே படத்தில் வில்லனாக நடித்து மிரட்டினார். பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான காதல் திரைப்படம் இன்றளவும் பரத்துக்கு மிகப்பெரிய பெயரை வாங்கித் தந்த படமாக உள்ளது. எம் மகன் திரைப்படம் தமிழ்நாட்டு மக்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால், அதன் பின்னர், பல படங்களில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பரத் நடித்து வந்தாலும் அவரால் பாக்ஸ் ஆபீஸ் ரீதியாக ஒரு பெரிய வெற்றிப் படத்தைக் கூட கொடுக்க முடியவில்லை. கடைசியாக காளிதாஸ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதன் 2ம் பாகம் கைகொடுக்கும் என நினைத்தார். ஆனால், இந்த படமும் சொதப்பிய நிலையில், விரக்தியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

காளிதாஸ் 2 வசூல்: கடந்த ஏப்ரல் 3ம் தேதி வெளியான காளிதாஸ் திரைப்படம் முதல் நாளில் 35 லட்சம் மட்டுமே வசூல் செய்ததாக சாக்னிக் தகவல் வெளியிட்டது. 2ம் நாள் வசூல் 40 லட்சம் என்றும் 3ம் நாள் வசூல் 40 லட்சமாக ஞாயிற்றுக்கிழமை வரை இருந்த நிலையில், திங்கட்கிழமை அதிரடியாக 8 லட்சம் மட்டுமே வசூல் செய்து அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டது. செவ்வாய்க்கிழமையான நேற்றும் சுமார் 8 லட்சம் வரையிலேயே வசூல் செய்துள்ளதாக கூறுகின்றனர். இதுவரை ஒட்டுமொத்தமாக 5 நாட்களில் 1.19 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாம். பல வருடங்களாக திரையுலகில் போராடி வரும் நடிகர் பரத்துக்கு கூடிய சீக்கிரமே வெற்றிப் படம் அமைய வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X