பாலிவுட் பறந்த பரத்.. சல்மான் கானுக்கே வில்லன் ஆயிட்டாரு!
Recommended Video
மும்பை: சின்ன தளபதி என்ற பட்டத்துக்கு சொந்தக்காரரான நடிகர் பரத்துக்கு சமீப காலமாக கோலிவுட்டில் மார்க்கெட் இல்லை. அவர் நடிப்பில் காளிதாஸ் என்ற படம் மட்டும் விரைவில் திரைக்கு வருகிறது.
இந்நிலையில், பாலிவுட் நடிகர் சல்மான் கானின் ராதே படத்தில் முக்கிய வில்லனாக பரத் கமீட் ஆகியுள்ள அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தபங் 3 படத்திற்கு பிறகு மீண்டும் பிரபுதேவாவுடன் சல்மான் கான் நடிக்கும் ராதே படத்தில் தான் பரத், சல்மான் கானுக்கு வில்லனாக நடிக்கிறாராம்.

தோல்வி
அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கத்தில் சல்மான் கான் கடைசியாக நடித்து வெளியான படம் பாரத். கேத்ரினா கைஃப், திஷா பதானி, தபு உள்ளிட்டோர் நடித்த பாரத் படம் சல்மானுக்கு மிகப்பெரிய தோல்வியை கொடுத்தது. அதனால், அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுக்க வேண்டும் என பிரபுதேவாவுடன் கைகோர்த்துள்ளார் சல்மான் கான்.

சுல்புல் பாண்டே
சல்மான் கானின் கமர்ஷியல் ஹிட் ஃபார்முலா படமான தபங் படத்தின் மூன்றாம் பாகத்தை பிரபுதேவா இயக்கி வருகிறார். தபங் படத்தில் சல்மான் கான் நடித்துள்ள சுல்புல் பாண்டே கதாபாத்திரம் பாலிவுட்டில் மிகவும் பிரபலமான ஒன்று. வரும் டிசம்பர் 20ம் தேதி வெளியாகவுள்ள தபங் 3 படம் நிச்சயம் சல்மான் கானுக்கு வெற்றியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திலும் சல்மான் கானுக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ளார்.

வாய்ப்பு
தபங் 3 திரைப்படம் விரைவில் ரிலீசாகவுள்ள நிலையில், மீண்டும் பிரபுதேவாவின் இயக்கத்தில் ராதே படத்தில் சல்மான் கான் நடித்து வருகிறார். இந்த படத்தில் கோலிவுட் ஹீரோ பரத்துக்கு சல்மான் கானுக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பை பிரபுதேவா வழங்கியுள்ளார். பரத் அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துவார் என நினைத்த பிரபுதேவா, பரத்தை பாலிவுட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
வில்லன்
கோலிவுட்டில் ஹீரோவாக நடித்து வரும் நடிகர் பரத், கடந்த சில ஆண்டுகளாக படங்கள் இன்றி தவித்து வருகிறார். இந்நிலையில், சல்மான் கானின் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என எண்ணி வில்லனாக நடிக்க சம்மதித்துள்ளார். மேலும், தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பிற்காக பிரபுதேவாவுக்கு நன்றி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











