ஆர்யாவுக்கு போட்டியா சைக்கிள் ஓட்டும் பரத்… வைரல் புகைப்படம்!

சென்னை : நடிகர் பரத் சைக்கிள் ஓட்டும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக மொத்த உலகமும் ஸ்தம்பித்து நிற்கிறது. மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர்.

பல பிரபலங்களும் தங்கள் குடும்பத்துடன் தங்களது நேரத்தை கழித்து வருகின்றன நிலையில் பரத் சைக்கிளிங் பயிற்சி செய்து வருகிறார்.

அறிமுகம்

அறிமுகம்

பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான பரத். தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து செல்லமே திரைப்படத்தில் விஷாலுடன் இணைந்து சவாலான எதிர்மறையான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்தார். இந்த படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

வரவேற்பை பெற்றது

வரவேற்பை பெற்றது

இதையடுத்து, பாலாஜி சக்தி வேல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பரத்துக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த படம் விமர்சான ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இந்த படத்திலிருந்து இவர் காதல் பரத் என அழைக்கப்பட்டு வருகிறார்.

சைக்கிளிங்

சைக்கிளிங்

தொடர்ந்து ஹிட்படங்களை கொடுத்து வரும் பரத் கொரேனா ஊரடங்கில் சைக்கிள் பயிற்சி செய்து வருகிறார். அந்த புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ள அவர், முதன் முறையாக சைக்கிள் ஓட்ட நேற்று முயற்சித்தேன் இன்று நன்றாக உணர்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் ஆர்யா ஏன் சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வமாக இருக்கிறார் என்பது இப்போதுதான் எனக்கு தெரிகிறது என கூறியுள்ளார்.

லீட் ரோலில்

லீட் ரோலில்

சல்மான் கான் மற்றும் திஷா பதானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள பாலிவுட் படமான 'ராதே' படத்தில் விரைவில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பரத் நடிக்கவுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X