Actor Bharath: முத்தையா மகனுக்கு வில்லனாகும் பரத்.. என்ன இப்படி இறங்கிட்டாரு!
சென்னை: நடிகர் பரத் தன்னுடைய முதல் படத்திலேயே ஷங்கர் இயக்கத்தில் நடித்து ஏராளமான வரவேற்பை பெற்றவர். தொடர்ந்து காதல், வெயில், அங்காடித்தெரு உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ஒரு கட்டத்தில் வெற்றி படங்களை கொடுக்க முடியாமல் முடங்கினார். அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்காத நிலையில் சமீபத்தில் வாணி போஜனுடன் இணைந்து நடித்த லவ் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் தற்போது இயக்குனர் முத்தையா இயக்கத்தில் அவரது மகன் மற்றும் புதுமுகங்கள் நடித்து வரும் படத்தில் பரத் வில்லனாக இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். முன்னதாக செல்லமே மற்றும் கடுகு ஆகிய படங்களில் வில்லனாக நடித்துள்ள பரத் மூன்றாவது முறையாக இந்த படத்தில் வில்லனாக கமிட் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாமல் திணறிவரும் பரத்திற்கு கிராமத்து கதைக்களத்தில் உருவாகிவரும் முத்தையாவின் படம் சிறப்பான வில்லன் கேரக்டரை கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். முத்தையா படங்களில் வில்லன்களுக்கு எப்போதுமே பவர்ஃபுல்லான கேரக்டர் அமையும். அந்த வகையில் இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் பரத்திற்கு ரீ என்ட்ரியாக அமையும் என்று எதிர்லபார்க்கலாம்.

நடிகர் பரத்: தன்னுடைய முதல் படத்திலேயே பிரம்மாண்டங்களின் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் நாயகனாக என்ட்ரி கொடுத்திருந்தார் பரத். பாய்ஸ் படத்தில் சித்தார்த் உள்ளிட்ட நான்கு ஹீரோக்களில் ஒருவராக பரத் நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார், இந்த படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் இளைஞர்களுக்கு உரிய பல விஷயங்களை வைத்து இவரது கேரக்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து வெற்றி படங்களில் இணைந்து பரத் நடித்துள்ளார். அடுத்ததாக காதல் படத்தில் நடித்து நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார். இந்த படத்தில் காதல் கைகூடாத நிலையில் இறுதியில் பைத்தியமாக அவரை படத்தின் நாயகி கண்டெடுக்கும் படியான கதைக்களம் காணப்பட்டது.
அடுத்தடுத்த வெற்றிப் படங்கள்: இந்த படத்தை தொடர்ந்து வெயில், அங்காடித்தெரு என அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்து தன்னை வளர்ந்து வரும் இளம் வெற்றிப்பட நடிகராக வெளிப்படுத்தினார். சமீபத்தில் இவரது நடிப்பில் லவ் படம் வெளியானது. வாணி போஜனுடன் இணைந்து இந்தப் படத்தில் நடித்திருந்தார். படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. பரத்திற்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் அவ்வப்போது ஓரிரு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அடுத்ததாக இயக்குனர் முத்தையா இயக்கத்தில் இணைய உள்ளார் பரத். ஆர்யா நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளியான காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம் படம் சொதப்பியது.
மீண்டும் வில்லனாகும் பரத்: இந்தப் படத்தை தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைய முத்தையா தொடர்ந்து முயற்சி செய்து வந்தார். இந்நிலையில் தற்போது தன்னுடைய மகன் விஜய் முத்தையாவை லீட் கேரக்டரில் வைத்து புது முகங்களுடன் அடுத்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது. பள்ளி பருவ காதலை ஆக்சன் கதைகளத்தில் வைத்து இந்த படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் முத்தையா. இந்நிலையில் இந்த படத்தில் தான் தற்போது வில்லனாக நடிகர் பரத் இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக விஷாலின் செல்லமே மற்றும் கடுகு ஆகிய படங்களில் பரத் வில்லனாக நடித்துள்ளார்.
கிராமத்து வில்லன்: பரத் வில்லன் கேரக்டரில் நடிக்கும் மூன்றாவது படமாக தற்போது விஜய் முத்தையாவின் படம் மாறியுள்ளது. இந்தப் படத்தில் பரத்தின் கேரக்டர் எப்படி இருக்கும் என்பது குறித்து அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தன்னுடைய முந்தைய படத்திலேயே பரத்தை வில்லனாக நடிக்க முத்தையா கேட்டதாகவும் ஆனால் அவர் மறுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தற்போது தன்னுடைய மகன் லீட் கேரக்டரில் நடிக்கும் படத்தில் பரத்தை வில்லனாக்கியுள்ளார் முத்தையா.


Click it and Unblock the Notifications











